திருமணத்துக்காக லோன் வாங்கப்போறீங்களா? இந்த 5 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
Smart Borrowing: இந்தியாவில் திருமணம் என்பது மிகவும் அதிக செலவுமிகுந்த ஒரு வைபவம். சிலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் சேமித்த பணத்தை கொண்டு திருமணம் செய்கிறார்கள். இந்த கட்டுரையில் திருமணத்துக்காக லோன் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் திருமணம் (Marriage) என்னும் ஒரு நாள் நிகழ்வுக்கு பின்னால் பல நாள் கனவு இருக்கிறது. இந்தியாவில் திருமணம் என்பது மிகவும் செலவு மிகுந்த ஒரு வைபவம். கல்யாணத்துக்காக நகைகள் வாங்குவது, உடைகள் வாங்குவது, மேக்கப் என பல செலவுகள் இருக்கிறது. குறிப்பாக கல்யாண மண்டபத்துக்காக மட்டுமே சில லட்சங்கள் செலவிட வேண்டியிருக்கும். இதெல்லாம் சாதாரணமாக நடக்கும் திருமணத்துக்கான செலவுகள். சிலர் தங்களது திருணமத்தை டிஜே, சினிமா ஸ்டைலில் ஊர்வலம், விதவிதமான சாப்பாடுகள் என மிக பிரம்மாண்டமாக நடத்துக்கிறார்கள். திருமணம் என்பது ஒரு நாள் நிகழ்வு, அது பெயர் சொல்லும் அளவுக்கு நடத்த வேண்டும் என கடன் வாங்குகிறார்கள். அவர்களுக்கு வெட்டிங் லோன் (Wedding Loan) என்ற பெயரில் திருமணத்துக்காக சில நிதி நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன. இந்த நிலையில் இந்த வகை லோன் வாங்குவதற்கு முன் கடைபிடிக்க வேண்டியவை குறித்து பார்க்கலாம்.
வெட்டிங் லோன் என்றால் என்ன ?
இந்தியாவில் மணக்கள் உடைகல், திருமண மண்டபம், அலங்காரம், உணவு, நகைகள், வீடியோ பதிவு, மெஹந்தி, மியூசிக் டிஜே, ஹனி மூன் செலவுகள் என குறைந்தது ரூ. 5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.50 லட்சங்கள் வரை செலவாகும். குறிப்பாக சில விவிஐபிகள் தங்கள் இல்ல திருணத்துக்காக சில கோடிகள் வரை செலவாகும். சமீபத்திய ஆய்வுகளின் படி, சென்னை போன்ற பெரு நகரங்களில் சராசரியாக ஒரு திருமணத்துக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலவாகிறது. இதில் பாதிபேர் தங்கள் வரவுக்கு மீறி செலவு செய்கிறார்கள். பெரும்பாலும் சுற்றியுள்ளவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என மிக பிரம்மாண்டமாக நடத்துக்கிறார்கள். அதற்காக கடன் வாங்குகிறார்கள். இதற்காக சில ஆன்லைன் செயலிகள், நிதி நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன. ஆனால் பிற்காலத்தில் இப்படி வாங்கும் கடன்கள் நிதி சுமையை ஏற்படுத்துகின்றன. இந்த கட்டுரையில் திருமணதுத்துக்கான செலவுகளை கட்டுப்படுத்துவது என பார்க்கலாம்.
இதையும் படிக்க : பழைய கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்ய போகிறீர்களா?.. அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!




திருமணத்துக்காக திட்டமிடும் வழிகள்
பட்ஜெட் தயாரிக்கவும்
மண்டபம், கேட்டரிங், அலங்காரம், உடைகள், புகைப்படம் ஹனி மூன் என திருமணத்துக்கான பட்ஜெட்டை கணக்கிடுங்கள். இதில் 10 முதல் 15 சதவிகிதம் வரை எதிர்பாராத செலவுகளுக்காக 10 முதல் 15 சதவிகிதம் வரை நிதி ஒதுக்க வேண்டும்.
தற்போதைய நிதி நிலைமையை மதிப்பிடவும்
திருமணத்துக்கு திட்டமிடுவதற்கு முன் உங்களிடமும் உங்கள் வருமான துணையிடமும் எவ்வளவு சேமிப்பு இருக்கிறது. திருமணத்துக்காக எவ்வளவு செலவிட முடியும் என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். ஏற்கனவே கடன் இருக்கிறதா அல்லது திருமணத்துக்காக கடன் வாங்கினால் மாத வருமானத்தில் கடனுக்கான தவணை செலுத்த முடியுமா என்பது குறித்து திட்டமிடுங்கள்.
இதையும் படிங்க : கரண்ட் அக்கவுண்ட் பற்றி தெரியுமா? அதன் நன்மைகள் என்ன?
எவ்வளவு கடன் வேண்டும் என்பதை திட்டமிடுங்கள்
திருமணத்துக்கான பட்ஜெட், உங்களிடம் இருக்கும் சேமிப்பு ஆகியற்றை அடிப்படையாக கொண்டு எவ்வளவு கடன் வேண்டும் என்பதை தீர்மானியுங்கள்.
நிதி நிறுவனங்களின் விதிமுறைகள்
நீங்கள் வாங்கும் கடனின் வட்டி விகிதம் எவ்வளவு? நிதி நிறுவனங்கள் கடனுக்காக எவ்வளவு பிடித்தம் செய்கிறார்கள்? கடன் காலம் எவ்வளவு? கடனை முன் கூட்டியே அடைப்பதற்கான விதிமுறைகள் ஆகியவற்றை தெரிந்துகொண்டு முடிவெடுங்கள்.
தேவையான ஆவணங்கள்
அடையாள ஆவணங்களான, ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட், முகவரி சான்று ரேஷன் கார்டு, மின்கட்டண ரசீது, வருமான சான்றுக்கு சம்பள ரசீது, வங்கி ஸ்டேட்மெண்ட், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இவை கடன் வாங்குவதற்கான அடிப்படை தேவைகள். கடன் வாங்குவதற்கு முன் இது சரியாக இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்.