Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பணத்தை பல மடங்காக உயர்த்த வாரன் பஃபட் சொல்லும் 3 முக்கிய விஷயங்கள்.. நோட் பண்ணுங்க!

Warren Buffett's Financial Tips | ஒவ்வொரு மனிதரும் தங்களது எதிர்கால தேவைகளுக்காக சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும். இந்த நிலையில், பாதுகாப்பான மற்றும் நிலையான முதலீடு செய்வது குறித்து வாரன் பஃபட் கூறும் சில டிப்ஸ்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பணத்தை பல மடங்காக உயர்த்த வாரன் பஃபட் சொல்லும் 3 முக்கிய விஷயங்கள்.. நோட் பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 31 Aug 2025 13:07 PM

எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய அனைவரும் கட்டாயம் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும். தங்களிடம் போதுமான நிதி இருந்தபோதும் கூட எதிர்பாராத சூழல்களில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் காரணமாக பலர் கடுமையான சவால்களை எதிர்க்கொண்டுள்ளனர். இந்த நிலையில், தான் அனைவரும் முதலீடு செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். சேமிக்க வேண்டும், பணத்தை பல மடங்காக உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். ஆனால், எவ்வாறு சேமிப்பது, பணத்தை பாதுகாப்பது என பலருக்கும் தெரியாது. இந்த நிலையில், பணத்தை பல மடங்காக உயர்த்த வாரன் பஃபட் சொல்லும்3 முக்கிய விஷயங்கள் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.

பணத்தை பல மடங்காக உயர்த்த வாரன் பஃபட் சொல்லும் 3 முக்கிய விஷயங்கள்

பங்குச்சத்தை முதலீட்டு ஜாம்பவான் என அழைக்கப்படும் வாரன் பஃபட் பணத்தை பாதுகாக்கவும், அதே சமயம் பல மடங்காக உயர்த்தும் சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார்.

அளவுக்கு அதிக கடன்

நம்மால் கையாள முடியாத கடனை ஒருபோதும் வாங்க கூடாது என வாரன் பஃபட் கடுமையாக எச்சரிக்கிறார். அவ்வாறு சக்திக்கு மீறி கடன் வாங்கும் பட்சத்தில் அது சிறுக சிறுக வளர்ந்து பெரிய பிர்சனையாக மாறிவிடும். எனவே தேவை இல்லாமல் கூடுதலாக கடன் வாங்குவது, கிரெடிட் கார்டுகளை (Credit Card) பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார்.

இதையும் படிங்க : வெறும் ரூ.50 ஆயிரத்தில் தொடங்கிய நிறுவனம்… ரூ.7 கோடி டர்ன் ஓவர்… சென்னையின் பிரபல டீ பிராண்டை உருவாக்கிய இளைஞர்

தேவையற்ற செலவுகள்

வருமானம் அதிகரிக்க அதிகரிக்க அதற்கு ஏற்ப செலவுகளை அதிகரிப்பது முறையான நிதி மேலாண்மை கிடையாது. என்னிடம் பணம் இருக்கிறது என்பதை காட்டிக்கொள்ளும் வகையில் ஆடம்பரமாக செலவு செய்வது முற்றிலும் தவறானது. எனவே வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் அதனை எவ்வாறு சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும் என்று பஃபட் கூறுகிறார்.

தவறான முதலீட்டை தேர்வு செய்வது

முதலீடு செய்வது எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு சரியான முறையில் முதலீடு செய்வதும் முக்கியமானது என வாரன் பஃபட் கூறுகிறார். காரணம், தவறான முதலீட்டை தேர்வு செய்யும் பட்சத்தில் அதன் மூலம் தேவையற்ற நிதி இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சரியான முதலீட்டை தேர்வு செய்து முதலீடு செய்வது சிறந்த பலன்களை பெற உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.