Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வருமான வரி தாக்கல் கடைசி தேதி நீட்டிப்புக்காக காத்திருக்காதீர்கள்.. எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்.. காரணம் என்ன?

Income Tax Filing Last Date | 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15, 2025 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வருமான வரி கடைசி தேதிக்கு பிறகு வருமான வரி தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் வட்டி மட்டும் அபராதம் விதிக்கப்படும்.

வருமான வரி தாக்கல் கடைசி தேதி நீட்டிப்புக்காக காத்திருக்காதீர்கள்.. எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்.. காரணம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Sep 2025 11:25 AM

இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் பொதுமக்கள் வருமான வரி தாக்கல் (Income Tax Filing) செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் 2024 – 2025 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செப்டம்பர் 15, 2025 உடன் முடிவடைய உள்ளதாக வருமான வரித்துறை (Income Tax Department) தெரிவித்துள்ளது. அதன்படி, இன்னும் 15 நாட்களில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிவடைய உள்ளது. இந்த நிலையில், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பார்க்கலாம்.

வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15, 2025 கடைசி நாள்

2024 – 2025 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15, 2025 கடைசி நாளாக உள்ளது. இந்த தேதி நீட்டிக்கப்பட வாய்ப்பு இருந்தாலும் வருமான வரியை முன்கூட்டியே தாக்கல் செய்வது சிறந்தது என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். காரணம், தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யும் பட்சத்தில் அதற்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே தேவையற்ற அபராதங்களை தவிர்க்க முன்கூட்டியே வருமான வரி செலுத்துவது சிறப்பானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பெற்றோர் அனுப்பும் பணத்துக்கு வரி செலுத்தணுமா? உண்மை என்ன?

டிசம்பர் 31, 2025 வரை வருமான வரி தாக்கல் செய்யலாமா?

2024 – 2025 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 30, 2025 கடைசி தேதியாக இருந்தது. பிறகு அது செப்டம்பர் 15, 2025 ஆம நீட்டிக்கப்பட்டது. தற்போதுவரை இதில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது. ஒருவேளை இந்த தேதியை தவறவிடும் நபர், டிசம்பர் 31, 2025 வரை வருமான வரி தாக்கல் செய்யலாம். ஆனால், அப்போது வருமான வரி தாக்கல் செய்யும் நபர்கள் அபராதத்துடன் வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.

இதையும் படிங்க : டேக்ஸ் செலுத்தும் நபரா நீங்கள்.. அதிகரிக்கும் வருமான வரி தாக்கல் மோசடி.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?

எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும்?

ஒருவேளை நீங்கள் கடைசி தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சதவீதம் வட்டி விதிக்கப்படும். அது தவிர தாமதமாக வருமான வரி தாக்கல் செய்வதற்கான அபராதமாக ரூ.5,000 செலுத்த வேண்டும். இதுவே உங்கள் மொத்த வருமான வரி ரூ.5 லட்சத்திற்கு மேல் உள்ளது என்றால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். எனவே தேவையற்ற அபராதங்களை தவிர்க்க முன்கூட்டியே வருமான வரி செலுத்துவது நல்லது.