Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமான திட்டம் – மாதம் ரூ.5,550 பெறும் வாய்ப்பு – எப்படி முதலீடு செய்வது?

Monthly Income Scheme : தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பை வழங்குகின்றன. குறிப்பாக தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டம் மூலம் நாம் மாதம் ரூ.5,000 வரை வருமானம் பெறலாம். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமான திட்டம் – மாதம் ரூ.5,550 பெறும் வாய்ப்பு – எப்படி முதலீடு செய்வது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Sep 2025 17:49 PM

தபால் நிலைய (Post Office) சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பை வழங்குகின்றன. குறிப்பாக சில திட்டங்களில் மாத வருமானமும் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதன்படி தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் ஒன்றான மாதாந்திர வருமான திட்டத்தில் (Monthly Income Scheme) முதலீடு செய்வதன் மூலம் மாத வருமானம் பெறலாம். இந்த திட்டத்தில் அதிபட்சம் ரூ.4.5 லட்சம் முதலீடு செய்யலாம். மேலும் 2025 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் படி இந்த திட்டத்தில் இணை கணக்கில் முதலீடு செய்பவர்கள் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதன் மூலம் நிலையான மாதம் வருமானம் பெறலாம்.

முதலீட்டு தொகை மற்றும் வருமானம்

போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமான திட்டத்தில் நாம் முதலீடு செய்யும் தொகைக்கு 7.4 சதவிகிதம் ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு ரூ.7.400 வட்டி வருமானம் கிடைக்கும். அதனை மாதத்துக்கு கணக்கிட்டால் நமக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.616 கிடைக்கும்.  அதே போல நாம் ரூ.2,00,000 முதலீடு செய்தால் ஆண்டுக்கு ரூ.14,800 வட்டி வருமானம் கிடைக்கும். அதனை மாதத்துக்கு கணக்கிட்டால் ரூ.1,233.33 கிடைக்கும்.

இதையும் படிக்க : குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ரூ.15 லட்சம் சேமிக்கலாம் – இதை டிரை பண்ணுங்க

இதே போல நாம் மாதம் ரூ.5,00,000 முதலீடு செய்தால் ஆண்டு வருமானம் ரூ.37,000 கிடைக்கும். அதனை மாதத்துக்கு கணக்கிட்டால் ரூ.3,083.33 கிடைக்கும். அதே போல ரூ.9 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.5,550 வருமானம் கிடைக்கும்.  இது நம் மாதாந்திர செலவுகளில் பெரிய உதவியாக இருக்கும்.

முதலீட்டு காலம்

இந்த மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீட்டு காலம் 5 ஆண்டுகள். இந்த 5 ஆண்டுகள் முடிந்தவுடன், முதலீட்டாளர்கள், அவர்கள் முதலீடு செய்த தொகையை வட்டியுடன் பெற்றுக்கொள்ள முடியும். இப்படி 5 ஆண்டுகளில் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் கிடைக்கும் என்பதால் நம் முதலீடு செய்யும் தொகைக்கு பாதுகாப்பும் கிடைக்கும், அதன் மூலம் வருமானமும் வரும்.

இதையும் படிக்க : ஓய்வு காலத்துக்கு திட்டமிடுகிறீர்களா? இந்த 8 விதிகளை கருத்தில் கொள்ளுங்கள்!

இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

  • பொதுவாக தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் அரசு உத்தரவாதம் இருப்பதால் இவை மிகவும் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
  • ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைக்கும் என்பதால் நம் மாதாந்திர செலவுகளை சமாளிக்க ஏதுவாக இருக்கும்.
  • முதலீட்டாளர்கள் விளைவுகள் குறித்து கவலைப்படாமல் வட்டி வருமானத்தை நம்பிக்கையுடன் பெறலாம்.
  • கணவன மனைவிகள் இணைந்து இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக பலன் கிடைக்கும்.