ஓய்வு காலத்துக்கு திட்டமிடுகிறீர்களா? இந்த 8 விதிகளை கருத்தில் கொள்ளுங்கள்!
How to Plan for Retirement Life : ஓய்வு காலத்தில் நிதி சிக்கலை தவிர்க்க முன்பே திட்டமிடுவது மிகவும் அவசியம். இந்த கட்டுரையில் ஓய்வு காலத்திற்காக பணத்தை சேமிக்கும் முன் கருத்தில் கொள்ள வேண்டிய 8 விதிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஓய்வு காலத்தில் (Retirement Life) பொருளாதார சிக்கலும் இல்லாமல் நிம்மதியாக வாழ அதற்கு முன் கூட்டியே திட்டமிடுவது அவசியம். குறிப்பாக ஓய்வு காலத்திற்கு பிறகு தங்கள் மனைவி, குழந்தைகளை பரமாரிக்க வேண்டியிருக்க வேண்டிய தேவை இருந்தால் அதற்கு பொருளாதார திட்டமிடல் அவசியம். திடீர் மருத்துவ செலவுகள் போன்ற அவசர தேவைகள் ஏற்படும் போது அவற்றை சமாளிக்க பொருளாதார ரீதியாக தன்னிறைவுடன் இருப்பது அவசியம். அப்படி தவறும் பட்சத்தில் ஒவ்வொரு பொறுப்பும் கூடுதல் சுமையாக மாறும். வீட்டு வாடகை (Home Rent) தொடங்கி, உணவு, குழந்தைகளின் கல்வி செலவுகள் என அனைத்து தேவைகளையும் சமாளிக்க பணம் தேவை. இந்த நிலையில் ஓய்வு காலதத்துக்கு தேவையான நிதியை எப்படி திட்டமிடுவது என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
குடும்பத்தின் செலவுகளை கணக்கிடுங்கள்
வீட்டு வாடகை, உணவு, மின், நெட், காப்பீடு, குழந்தைகளின் கல்வி, மருத்துவ செலவுகள் என ஒவ்வொரு மாதமும் நம் வீட்டில் எவ்வளவு செலவாகிறது என கணக்கிடுங்கள். பின்னர் அதில் 12 முதல் 20 சதவிகிதத்தை ஓய்வு காலத்துக்கு என சேமித்து வையுங்கள்.
நீண்ட கால தேவைகளுக்காக திட்டமிடுங்கள்.
உங்கள் வயது, உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளின் வயது ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஓய்வு காலத்துக்கான நிதியை முடிவு செய்யுங்கள். உதாரணமாக நீங்கள் 60 வயதில் ஓய்வு பெறுகிறீர்கள் என்றால் அப்போது உங்கள் குழந்தைக்கு 15 வயது என்றால், அடுத்த 10 ஆண்டுகளுக்கான கல்வி செலவுகளுக்கான பணம் உங்களிடம் இருக்க வேண்டும்.




இதையும் படிக்க : மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்க வேண்டுமா?.. அப்போது இந்த திட்டத்துல இப்படி முதலீடு செய்யுங்க!
பணவீக்கத்தை கருத்தில் கொள்வது முக்கியம்
கல்வி செலவுகள் ஆண்டுக்கு 8 முதல் 10 சதவிகிதம் வரை உயரலாம். பெற்றோருக்கான மருத்துவ செலவும் இன்னும் வேகமாக அதிகரிக்கும். அதற்கேற்ற படி திட்டமிடவேண்டும்.
மருத்துவத்துக்கு என தனியாக நிதி ஒதுக்குங்கள்
எல்லா நேரமும் காப்பீடு மற்றும் கைகொடுக்காது. அடிக்கடி மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள் போன்றவை காப்பீட்டில் சேராது. தற்போது குடும்பத்திற்கு செலவாகும் மருத்துவத்துக்கான தொகையை விடா 4 முதல் 5 மடங்கு அதிக தொகையை சேமிப்பது அவசியம்.
4% விதி மாற்றம்
ஓய்வுக்கு பிறகு 4 சதவிகிதம் பணம் எடுக்கலாம் என்ற விதி தனி நபர்களுக்கு மட்டுமே பொருந்தும். குடும்பத்துக்கு 2.5 அல்லது 3 சதவிகிதம் மட்டுமே எடுப்பது நல்லது. உதாரணமாக வருடாந்திர செலவு ரூ.9 லட்சம் என்றால், 3 சதவிகித விதிப்படி ரூ.3 கோடி ஓய்வு நிதி தேவைப்படும்.
இதையும் படிக்க : இனி இறந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து எளிதாக பணம் பெறலாம் – ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறை!
பெரிய செலவுகளுக்கான நிதியை தனியே பராமரிக்க வேண்டும்
குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம், பெற்றோரின் சிகிச்சை போன்ற பெரிய செலவுகளுக்கு தனி நிதி அமைக்க வேண்டும். இது ஓய்வு காலத்துக்காக சேமிக்கும் நிதியோடு இந்த செலவுகளையும் சேர்க்க கூடாது.
நிச்சயமற்ற வருவாயை நம்ப வேண்டாம்
வாடகை வருமானம், அரசு திட்டங்கள் போன்றவை நிலையானவை அல்ல. அவை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம். அதற்கு பதிலாக மியூச்சுவல் ஃபண்ட், சிப் போன்றவற்றை கருத்தில் கொள்ளலாம்.