EPFO: இனி இறந்த நபரின் குழந்தைகளுக்கு நேரடியாக பணம் கிடைக்கும் – விண்ணப்பிப்பது எப்படி?
EPFO Eases PF Withdrawal : இதுவரை இறந்த நபர்களின் குடும்பத்துக்கு பிஎஃப் பணம் கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த நடைமுறையை இபிஎஃப்ஓ மிகவும் எளிதாக மாற்றியிருக்கிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் ஓய்வு காலத்தில் நிதி சுதந்திரம் பெறுவதற்காக மத்திய அரசு ஏற்படுத்திய திட்டம் தான் வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPFO). இந்த திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்துக்கொள்ளப்படும். அதற்கு நிகரான தொகை நிறுவனங்களும் வழங்கும். இந்த தொகை மாத வட்டி கணக்கிடப்பட்டு, அந்த ஆண்டு முடிவில் அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். இப்படி சேமிக்கப்படும் தொகை பணியாளர் ஓய்வு பெறும் காலத்தில் மொத்தமாக வழங்கப்படும். இடையில் அவசர தேவைகளுக்கும் பணியாளர்கள் பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்த நிலையில் பணியாற்றும் நேரத்தில் பணியாளர் இறந்தால் அவரின் குடும்பத்துக்கு பிஎஃப் பணம் கிடைப்தில் சிரமங்கள் இருந்தது. அந்த நடைமுறையை எளிமைப்படுத்தும் விதத்தில் இபிஎஃப்ஓ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணியாளர்களின் குடும்பத்துக்கு நேரடியாக பணம் கிடைக்கும்
பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (EPFO) சமீபத்தில் வெளியிட்ட புதிய அறிக்கையின் படி, வருங்காலங்களில் பணியாளர்கள் மரணம் அடைந்தால் அவர்களின் குழந்தைகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பிஎஃப் தொகை செலுத்தப்படும். இதற்கு முன் பணியாளர்கள் இறந்தால் அவர்களின் குழந்தைகள் பிஎஃப் தொகையைப் பெற வாரிசு சான்றிதழை சமர்பிக்க வேண்டியிருந்தது. குறிப்பாக முன்பு பிஎஃப் தொகை, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு தொகைகளைப் பெற வாரிசு சான்றிதழைப் பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியது. இது குடும்பத்தினரிடையே மேலும் மன உளைச்சலை அதிகரித்தது. தற்போது இந்த முறை ரத்து செய்யப்பட்டுள்ளது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : இனி இறந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து எளிதாக பணம் பெறலாம் – ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறை!




இப்போது என்ன செய்ய வேண்டும்?
இதன் மூலம் இறந்த நபரின் குழந்தைகளுக்கு பிஎப் தொகை சுலபமாக கிடைக்கும். இதற்காக அவர்களது குழந்தைகளுக்கு வங்கி கணக்கு தொடங்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்ப்டடுள்ளது. இதன் மூலம் பிஎஃப், ஓய்வூதியம், காப்பீட்டுத் தொகை நேரடியாக அந்தந்த வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். இதன் மூலம் குடும்பத்தினர் பணத்தை விரைவாக பெற்றுக்கொள்ள முடியும்.
இதையும் படிக்க : UAN எண் இல்லாமலே பிஎஃப் பணம் எடுக்கலாம்.. அட இது தெரியாம போச்சே!
வாரிசுகள் பிஎஃப் தொகையை பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
மரணமடைந்த உறுப்பினரின் பிஎஃப் தொகையைப் பெற இபிஎஃப்வில் இபிஎஃப் ஃபார்ம் 20 ( EPF Form 20) பயன்படுத்தப்படுகிறது. இந்த படிவத்தை நாமினியாக நியமிக்கப்பட்ட நபர்கள் அல்ல சட்டப்பூர்வமான வாரிசுகள் நிரப்பி பிஎஃப் கோரிக்கைய சமர்பிக்கலாம். இந்த புதிய மாற்றத்தின் மூலம் பிஎஃப் தொகை விரைவாக வழங்கப்பட்டு மறைந்த நபரின் குடும்பத்தினர், குறிப்பாக குழந்தைகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.