Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

UAN எண் இல்லாமலே பிஎஃப் பணம் எடுக்கலாம்.. அட இது தெரியாம போச்சே!

EPFO PF Withdrawal Without UAN | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் பிஎஃப் பணம் எடுக்க வேண்டும் என்றால் யுஏஎன் எண் கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில் யுஏஎன் எண் இல்லாமல் பிஎஃப் பணத்தை எடுப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

UAN எண் இல்லாமலே பிஎஃப் பணம் எடுக்கலாம்.. அட இது தெரியாம போச்சே!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 07 Aug 2025 12:10 PM

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் (EPFO – Employee Provident Fund Organization) இருந்து பிஎஃப் (PF – Provident Fund) தொகையை பெற வேண்டும் என்றால் அதற்கு யுஏஎன் (UAN – Universal Account Number) எண் கட்டாயமாக உள்ளது. அந்த எண் இல்லை என்றால் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பிஎஃப் பணத்தை எடுக்க முடியாத நிலை உள்ளது. ஆனால், யுஏஎன் எண் இல்லை என்றாலும் உங்களால் பிஎஃப் பணத்தை எடுக்க முடியும் என்றால் நப்ம முடிகிறதா. உண்மை தான் யுஏஎன் எண் இல்லை என்றாலும் பிஎஃப் தொகையை எடுக்க முடியும். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

UAN எண் இல்லை என்றாலும் பிஎஃப் பணத்தை எடுக்கலாம் – எப்படி?

இபிஎஃப்ஓ இணையதளம் மூலம் பிஎஃப் பணம் எடுக்க வேண்டும் என்றால் யுஏஎன் கட்டாயம் தேவைப்படும். ஆனால்,  இபிஎஃப்ஓ அலுவலகத்திற்கு நேராக சென்று விண்ணப்பிப்பதன் மூலம் யுஏஎன் எண் இல்லாமல் பிஎஃப் பணத்தை எடுக்க முடியும். இவ்வாறு யுஏஎன் எண் இல்லாமல் பணத்தை எடுப்பதற்கு படிவம் 19 மற்றும் படிவம் 10சி, கேன்சல் செய்யப்பட்ட செக், பாஸ்புக் நகல், ஏதேனும் ஆவணங்களின் நகல் தேவைப்படும். அதுமட்டுமன்றி உங்களுடைய அடையாளம் மற்றும் சேவை காலத்தை உறுதி செய்யும் வகையில் நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து ஒரு கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்  என்பதும் அவசியமாக உள்ளது.

இதையும் படிங்க : EPFO : ஊழியர்களின் பிஃஎப் கணக்கில் நிறுவனங்கள் எப்படி பங்களிக்கின்றன? விவரம் இதோ!

கூடுதல் கால அவகாசம் எடுக்கும் ஆஃப்லைன் பிஎஃப் கிளெய்ம்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளத்தில் பிஎஃப் பணத்தை எடுப்பதை விடவும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் அலுவலகத்தில் விண்ணப்பித்து பிஎஃப் பணம் எடுப்பது கூடுதல் நேரம் எடுக்கும். இபிஎஃப்ஓ அலுவலகம் மூலம் பிஎஃப் பணம் எடுப்பதற்கு குறைந்தபட்சம் 2 வாரங்கள் ஆகும். இந்த நிலையில் பணியில் சேர்ந்த தேதி, வங்கி கணக்கு விவரங்கள், பெயர் போன்றவற்றில் ஏதேனும் முரண்பாடுகள் மற்றும் எழுத்து பிழைகள் இருக்கும் பட்சத்தில் கூடுதல் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் ஆவணங்கள் முறையாக உள்ளதா என்பதை சோதனை செய்த பிறகு விண்ணப்பியுங்கள்.

இதையும் படிங்க : EPFO : பிஎஃப் வட்டியை வரவு வைக்கும் இபிஎஃப்ஓ.. சுலபமாக தெரிந்துக்கொள்வது எப்படி?

என்னதான் யுஏன் எண் இல்லாமல் ஆஃப்லைனில் பிஎஃப் பணத்தை எடுக்க உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் உங்களுடைய பான் அல்லது ஆதார் எண்ணை பயன்படுத்தி இபிஎஃப்ஓ இணையதளத்தில் அதனை ஆக்டிவே செய்வது அவசியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.