Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

போஸ்ட் பாக்ஸுக்கு குட் பை ? முடிவுக்கு வரும் பதிவுத் தபால் சேவை!

End of an Era: இந்தியா தபால்துறை பதிவுத் தபால் சேவையை நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சேவை இனி ஸ்பீட் போஸ்ட் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மக்களுக்கு மக்களின் நம்பகமான சேவையாக இருந்த பதிவுத் தபால் விரைவில் முடிவுக்கு வரும் நிலையில் மக்கள் போஸ்ட் பாக்ஸ்க்கு குட்பை சொல்லி வருகின்றனர்.

போஸ்ட் பாக்ஸுக்கு குட் பை ?  முடிவுக்கு வரும் பதிவுத் தபால் சேவை!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Aug 2025 21:38 PM

இந்தியாவில் பல ஆண்டுகளாக கடிதங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக அனுப்பும் நம்பிக்கையான சேவையாக பதிவு தபால் (Registered Post) இருந்தது. குறிப்பாக தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில் பதிவுத் தபால் தான் தகவல் தொடர்பு கருவியாக இருந்து வந்தது.  இந்த நிலையில் இந்திய தபால் துறை (India Post) வருகிற செப்டம்பர் 1, 2025 முதல் பதிவு தபால் சேவையை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இனி தனிப்பட்ட முறையில் இயங்காது. ஆனால் இது நிறுத்தப்பட வில்லை. ஸ்பீட் போஸ்ட் சேவையில் இணைக்கப்படுகிறது. பதிவு தபால் என்பது  நாம் ஒரு போஸ்ட் அனுப்பும்போது அந்த போஸ்ட் குறிப்பிட்ட நபருக்கு சென்றடைவதை உறுதி செய்யப்படும். நமது போஸ்டை டிராக் செய்ய முடியும். தற்போது இந்த சேவை நிறுத்தப்படுவதோடு, ஸ்பீட் போஸ்ட் சேவையில் இணைக்கப்படுகிறது.

ஏன் இந்த சேவை நிறுத்தப்படுகிறது?

இந்தியாவில் பதிவுத் தபால் முறையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த 2011 – 12 ஆம் ஆண்டில் இந்தியாவில் 244 மில்லியன் கடிதங்களை இந்திய தாபல் துறை கையாண்டது. ஆனால் கடந்த 2019 – 20க்குள் இது 184 மில்லியனாக குறைந்திருக்கிறது. இது சுமார் 25 சதவிகிதம் வீழ்ச்சியடைய செய்திருக்கிறது. மேலும் மக்கள் வாட்ஸ்அப், இமெயில், தனியார் கூரியர் சர்வீஸ் போன்றவற்றை பயன்படுத்த தொடங்கியதும் இதற்கு ஒரு காரணம். குறிப்பாக அரசுத் துறைகளும் டிஜிட்டல் கம்யூனிகேஷனை தேர்வு செய்கிற சூழ்நிலையில், ஸ்பீட் போஸ்ட் இருக்கும் போது பதிவு தபாலை வைத்திருப்பது தேவையற்றது என இந்திய தபால் துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க  : தபால் அலுவலகம் உங்கள் சேமிப்பு கணக்கை முடக்கலாம்! காரணம் என்ன தெரியுமா?

ஸ்பீட் போஸ்ட் கட்டணத்தால் ஏற்படும் பாதிப்பு

பதிவு தபாலுக்கான கட்டணம் ரூ.25 முதல் ரூ. 30 வரை மட்டுமே நிர்ணயிக்கப்ப்டடு வந்தது. ஆனால் ஸ்பீட் போஸ்ட் சேவைக்கு ஆரம்ப கட்டணமே ரூ.41 என கூறப்படுகிறது. இதனால் இதுவரை பதிவுத் தபாலை பயன்படுத்தி வந்த கிராமப்புற மக்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், நீதிமன்ற அலுவலர்கள் ஆகியோர் பாதிக்கப்படலாம். எனவே ஸ்பீட் போஸ்ட் கட்டணத்தை குறைக்க கோரிக்கை எழலாம்.

இதையும் படிக்க : இனி ஆதார் e-KYC மூலம் RD மற்றும் PPF கணக்குகளை பராமரிக்கலாம் – எப்படி செயல்படும்?

யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?

  • பதிவுத் தபால் சேவை நிறுத்தப்படுவதால், அடிக்கடி சட்ட ரீதீயான தகவல்களை அனுப்பும் வக்கீல்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்.
  • ஹால் டிக்கெட், சான்றிதழ்கள் அனுப்பும் கல்வி நிறுவனங்கள்.
  • அரசுத் துறைகள், குறிப்பாக கிராமப்புறத்தில் உள்ள கிளைகள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
  • பதிவுத் தபாலை அதிகம் பயன்படுத்தும் மக்கள்

இதுகுறித்து விளக்கம் அளித்த இந்திய தபால்துறை, ஸ்பீட் போஸ்ட் சேவையில் இணைப்பதால் டெலிவரி வேகமாக நடைபெறும். டிராக்கிங் வசதி கிடைக்கும் என விளக்கமளித்துள்ளது.