Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Post Office: தினமும் ரூ.411செலுத்தினால்… ரூ.43 லட்சம் சம்பாதிக்கலாம்… தபால் நிலைய சூப்பர் திட்டம்

Public Provident Fund: தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பை வழங்குகின்றன. இந்த நிலையில் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ரூ. 411 முதலீடு செய்வதன் மூலம் 43 லட்சம் லாபம் பெறலாம். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Post Office: தினமும் ரூ.411செலுத்தினால்… ரூ.43 லட்சம் சம்பாதிக்கலாம்… தபால் நிலைய சூப்பர் திட்டம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Sep 2025 21:43 PM IST

தற்போது தபால் நிலைய (Post Office) சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. குறிப்பாக சமீப காலமாக தபால் நிலைய சேமிப்பு திட்டங்களுக்கு பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீங்கள் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களை தேடுகிறீர்கள் என்றால் தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் உங்களுக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும். இந்த திட்டத்தின் மூலம் குறைவான தொகையை முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம். மேலும் இது அரசு ஆதரவு பெற்ற திட்டம் என்பதால் நம் முதலீடு செய்யும் தொகை பாதுகாப்பாக இருக்கும். வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரூ. 43 லட்சம் வரை சேமிக்கலாம். இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பிபிஎஃப் திட்டம் என்றால் என்ன?

ஆபத்து இல்லாமல் முதலீடு செய்ய விரும்புகிறவர்களுக்கும் வரி சலுகைகள் விரும்புபவர்களுக்கும் இந்த திட்டம் ஏற்றது. குறிப்பாக நீண்ட கால இலக்குகளைக் கொண்டவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பொருத்தமானது. இந்த திட்டம் தற்போது ஆண்டுக்கு 7.9 சதவிகிதம் வட்டி வழங்குகிறது. இது பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் அதிக வருமானத்தை வழங்குகிறது.

இதையும் படிக்க : Post Office Scheme: 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் லாபம் கிடைக்கும் திட்டம் – எப்படி முதலீடு செய்வது?

ஒரு நாளைக்கு ரூ.411 முதலீடு செய்வதன் மூலம் ரூ.43 லட்சம் சம்பாதிப்பது எப்படி?

ஒரு பிபிஎஃப் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.12,500, அதாவது ஒரு நாளைக்கு ரூ.411 முதலீடு செய்தால், ஆண்டுக்கு மொத்தம் ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்யப்படும். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். இந்த 15 ஆண்டுகளுக்கு நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்தால், முதிர்வு நேரத்தில் சுமார் ரூ.43.60 லட்சம் கிடைக்கும். இதில், ரூ.21 லட்சத்திற்கும் அதிகமான தொகை வட்டியாக வரும்.

வரி விலக்கு

பிபிஎஃப் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை, கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகை அனைத்தும் முற்றிலும் வரி விலக்கு உண்டு. இது வருமான வரிப் பிரிவு 80C இன் கீழ் வருகிறது.  அரசு அதற்கு உத்தரவாதம் அளிப்பதால், உங்கள் முதலீடு முற்றிலும் பாதுகாப்பானது. இந்தத் திட்டம் வங்கி நிலையான வைப்புத்தொகையை விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. நீங்கள் ஒரே நேரத்தில் அல்லது 12 மாத தவணைகளில் பணத்தை டெபாசிட் செய்யலாம். அவசரகாலத்தில், கணக்கைத் தொடங்கிய 3 முதல் 6 ஆண்டுகளுக்குள் குறைந்த வட்டி விகிதத்தில் உங்கள் வைப்புத்தொகையில் கடன் பெறலாம்.

இதையும் படிக்க : குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ரூ.15 லட்சம் சேமிக்கலாம் – இதை டிரை பண்ணுங்க

எப்படி முதலீடு செய்வது?

நீங்கள் ஒரு தபால் நிலையத்தில் பிபிஎஃப் கணக்கைத் திறக்க வேண்டும்.  இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி அல்லது டாக் பே செயலி மூலம் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து உங்கள் பிபிஎஃப் கணக்கிற்கு ஆன்லைனில் பணத்தை மாற்றலாம். சிறிய தொகைகளுடன் நீண்ட காலத்திற்கு அதிக பணம் சம்பாதிக்க விரும்புவோருக்கு பிபிஎஃப் ஒரு சிறந்த வழி. இது உங்கள் நிதி எதிர்காலத்தை பாதுகாக்கிறது. இது குறித்து மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்புகொள்ளலாம்.