Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி நிறுத்தப்பட்டுள்ளதா? காரணம் இதுதான்!

, EPFO Alert : பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி ஒரு பிஎஃப் கணக்கு 36 மாதங்களுக்கு மேல் செயல்படாமல் இருந்தால், அந்த கணக்கில் வட்டி வரவு வைக்கப்படாது என அறிவித்துள்ளது.

உங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி நிறுத்தப்பட்டுள்ளதா? காரணம் இதுதான்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 02 Sep 2025 16:43 PM

பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (EPFO) 2024 – 2025 ஆண்டுக்கான வட்டியை 8.25 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது. இது வருடத்திற்கு ஒருமுறை கணக்கில் வரவு வைக்கப்படும். அதாவது மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை நம் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். அதே அளவு தொகை நாம் வேலை பார்க்கும் நிறுவனத்தால் பிஎஃப் கணக்கில் செலுத்தப்படும். இப்படி நம் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகைக்கு மாத வட்டி கணக்கிடப்படும். மொத்தமாக ஆண்டுக்கொருமுறை வட்டியானது நம் கணக்கில் செலுத்தப்படும். சில நேரங்களில் நம் பிஎஃப் கணக்கில் வட்டி செலுத்தப்படாமல் இருக்கலாம். அதற்கான காரணம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மூன்று ஆண்டுகள் செயலற்ற நிலையில் இருக்கும் பிஎஃப் கணக்குகளுக்கு வட்டி கிடைக்காது. இதுபோன்ற நேரங்களில் உறுப்பினர்கள் தங்கள் பழைய பிஎஃப் கணக்கை மாற்றவோ அல்லது நிதியை எடுக்கவோ இபிஎஃப்ஓ அறிவிறுத்தியுள்ளது.

2024-25 நிதியாண்டிற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) 8.25% வருடாந்திர வட்டி விகிதத்தை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. இருப்பினும், இந்த வட்டி ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்பட்டு வருடத்திற்கு ஒரு முறை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால், உங்கள் பிஎஃப் கணக்கு தொடர்ந்து 36 மாதங்கள் அதாவது 3 வருடங்கள் செயலற்ற நிலையில் இருந்தால், அதாவது அந்த நேரத்தில் அதில் எந்த வைப்புத்தொகை அல்லது திரும்பப் பெறும் பரிவர்த்தனையும் இல்லை என்றால், அந்தக் கணக்கில் வட்டி நிறுத்தப்படும். இந்த விதி EPFO ​​ஆல் ஆகஸ்ட் 27, 2025 அன்று சமூக ஊடகங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : EPFO 3.0 : ஏடிஎம் முதல் யுபிஐ சேவை வரை… நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள் என்ன?

இபிஎஃப்ஓ வெளியிட்ட புதிய அறிவிப்பு

 

செயலற்ற பிஎஃப் கணக்குக்கு வட்டி கிடைக்காது

இபிஎப்ஓவின் தகவலின் படி, ஒரு கணக்கில் மூன்று ஆண்டுகளுக்கு வட்டி வரவு தவிர வேறு எந்த நிதி நடவடிக்கையும் இல்லாதபோது அது செயலற்றதாகக் கருதப்படுகிறது. ஓய்வு பெற்ற பிறகு,  பிஎஃப் கணக்கு 3 ஆண்டுகள் மட்டுமே செயலில் இருக்கும் என்பது சிறப்பு. அதாவது, 55 வயதில் ஒருவர் ஓய்வு பெற்ற பிறகு, உங்கள் கணக்கு 58 வயது வரை தொடர்ந்து வட்டியைப் பெறும், அதன் பிறகு அது செயலற்றதாகிவிடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் வேலையை மாற்றியிருந்தால், புதிய கணக்கை திறந்த, பழைய கணக்கை மாற்றுவது அவசியம். மறுபுறம், நீங்கள் தற்போது வேலை செய்யவில்லை என்றால், உங்கள் பணம் செயலற்றதாக மாறாமல் இருக்க, பிஎஃப் நிதியை சரியான நேரத்தில் திரும்பப் பெறுவது நல்லது.

இதையும் படிக்க : இனி இறந்த நபரின் குழந்தைகளுக்கு நேரடியாக பணம் கிடைக்கும் – விண்ணப்பிப்பது எப்படி?

பிஎஃப் கணக்கை செயலில் வைத்திருங்கள்

உங்கள் பிஎஃப் கணக்கு 36 மாதங்களுக்கும் மேலாக செயலற்றதாக இருந்தால், அது செயல்படாமல் போகும் என்றும், அதில் வட்டி கிடைக்காது என்றும் இபிஎஃப்ஏ ​​அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் தெளிவாகக் கூறியுள்ளது. எனவே, பணிபுரியும் உறுப்பினர்கள் தங்கள் பழைய பிஎஃப் கணக்கை உடனடியாக புதிய பிஎஃப்  கணக்கிற்கு மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது வேலை செய்யாதவர்கள், வட்டி இழப்பு ஏற்படாமல் இருக்க, பணத்தை உடனடியாக திரும்ப பெறலாம். அந்த பெணத்தை வேறு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.