Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மொபைல் ஆப்களில் கடன் பெறுவது உண்மையில் பாதுகாப்பானதா? – கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

Digital Lending Alert : சமீப காலமாக உடனடி பெர்சன்ல் லோன் வழங்கும் செயலிகள் அதிகரித்திருக்கின்றன. குறைவான ஆவணங்கள் சமர்பித்தால் போது சில நிமிடங்களில் கடன் கிடைக்கும். இதனால் அவசர தேவை இருப்பவர்கள் இந்த செயலிகளை பயன்படுத்தி கடன் பெறுகின்றனர் .

மொபைல் ஆப்களில் கடன் பெறுவது உண்மையில் பாதுகாப்பானதா? – கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Sep 2025 18:40 PM IST

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல் செயலிகள் மூலம் பெர்சனல் லோன் (Personal Loan) பெறுவது மிகவும் எளிமையாகிவிட்டது. வங்கிகளை ஒப்பிடும்போது குறைவான ஆவணங்களை சமர்பித்தால் மட்டும் போதும். சில விநாடிகளில் நமக்கு கடன் கிடைத்து விடும். அவசர தேவைகளுக்கு இந்த வகை மொபைல் செயலிகள் நமக்கு பெரிதும் கைகொடுக்கிறது. வட்டி அதிகம் என்றாலும் நமக்கு உடனடியாக கடன் கிடைப்பது இதன் முக்கிய நன்மை. மேலும் மாதத் தவணைகளாக செலுத்தி நம் கடனை அடைத்துவிட முடியும். ஆனால் மொபைல் செயலிகளில் கடன் வாங்குவது பாதுகாப்பானதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இதன் பின்னால் மறைந்திருக்கும் அபாயங்களைப் புரிந்துகொள்ளாமல் கடன் வாங்குவது பெரும் சிக்கல்களை உருவாக்கும். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நம்பகமான செயலியா என கண்டறிவது எப்படி?

முதலில் நாம் கடன் வாங்க விரும்பும் செயலிகள், இந்திய ரிசர்வ் வங்கியின் பதிவு செய்யப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் தொடர்புடையதா என உறுதி செய்துகொள்வது மிகவும் அவசியம். இந்திய ரிசர்வ் வங்கி தனது இணையளத்தில் அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அவற்றோடு நேரடியாக இணைந்திருக்கும் செயலிகள் மூலம் கடன் வாங்குவது நமக்கு பாதுகாப்பானது.

இதையும் படிக்க : மாத சம்பளம் சட்டுனு கரையுதா? 50-30-20 ஃபார்முலா இனி ஃபாலோ பண்ணுங்க!

விமர்சனங்களை  படித்து தெரிந்துகொள்ளவும்

ஒரு செயலிகளை பயன்படுத்தும் முன், ஏற்கனவே அதனை பயன்படுத்தியவர்கள் அளித்த விமர்சனங்களை படித்து அதன் சாதக, பாதக அம்சங்களை தெரிந்துகொள்வது அவசியம். கூகுகள் ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் சென்று அந்த செயலிக்கு எவ்வளவு விமர்சனங்கள் வந்துள்ளன, நெகட்டிவ் விமர்சனங்களில் என்ன குறிப்பிட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்வது நல்லது.  குறிப்பாக ஏற்கனவே பயன்படுத்தியவர்கள் மிரட்டல், மறைக்கப்பட்ட கட்டணங்கள், நம் அளிக்கும் தகவல்களை தவறாக பயன்படுத்துதல் போன்ற பிரச்னைகளை கூறியிருந்தால் அதனை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் தேவையற்ற காண்டாக்ட்ஸ், போட்டோஸ், லொகேஷன் போன்ற அனுமதி கேட்கும் செயலிகளைத் தவிர்க்கவும்.

சில நிமிடங்களில் பணம், ஆவணங்கள் தேவையில்லை, மிகக் குறைந்த வட்டி போன்ற விளம்பரங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். உண்மையான நிதி நிறுவனங்கல் எப்போதும் முறையான KYC சோதனைகள், திரும்ப செலுத்தும் தகுதி போன்றவற்றை மதிப்பீடு செய்வார்கள். சில சட்ட விரோத செயலிகள் உயர்ந்த வட்டி விகிதம், மறைக்கப்பட்ட கட்டணம், தவணை தாமதமாக செலுத்தினால் அதற்கும் கட்டணம் என வாடிக்கையாளர்களை சிக்கவைக்கின்றன.

இதையும் படிக்க : கடன் நிராகரிப்பு உங்கள் சிபில் ஸ்கோரை பாதிக்குமா? உண்மை என்ன?

வாடிக்கையாளர் சேவை முக்கியம்

ஒரு நம்பகமான கடன் வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவை, தெளிவான தொடர்பு விவரங்கள் போன்றவற்றை வழங்கும். இவை இல்லாத செயலிகளை தவிர்க்க வேண்டும்.

ஏதேனும் செயலிகள் உங்களை மிரட்டினால், அழுத்தம் தந்தால் அல்லது தவறான முறையில் நடந்துகொண்டால், உடனடியாக இந்திய ரிசர்வ் வங்கியின் சைபர் கிரைம் செல் மூலம் புகார் அளிக்க வேண்டும். தனிப்பட்ட காண்டாக்ட்ஸ் பயன்படுத்தி மிரட்டுதல் அல்லது அவதூறு பரப்புதல் போன்றவை சட்டவிரோதமானவை இது குறித்து உங்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் நீங்கள் புகார் தெரிவிக்கலாம்.