Fixed Deposit : 1 – 3 ஆண்டுகளுக்கான FD முதலீடு.. 7.77% வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!
High-Yield Fixed Deposits | ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதன் காரணமாக பல வங்கிகள் தங்களது நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டியை குறைத்துவிட்டன. இருப்பினும் எஃப்டி திட்டங்களுக்கு சிறந்த வட்டி வழங்கும் வங்கிகள் பட்டியல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மனிதர்களின் வாழ்வில் சேமிப்பு (Saving) என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி சவால்களை சமாளிக்கவும், பாதுகாப்பான மற்றும் நிலையான பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டும் என்றால் ஒருவர் கட்டாயம் சேமிப்பு அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும். அவ்வாறு சாமானிய மக்களும் மிக சுலபமாக முதலீடு செய்யும் வகையில் உள்ள ஒரு திட்டம் தான் நிலையான வைப்பு நிதி திட்டம் (FD – Fixed Deposit Scheme). இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு சிறந்த வட்டி வழங்கும் சில வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
நிலையான வைப்பு நிதி திட்டம் – சிறந்த வட்டி வழங்கும் வங்கிகள்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை (Repo Interest Rate) குறைத்த நிலையில், பெரும்பாலான வங்கிகள் தங்களது நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டியை குறைத்துவிட்டன. இருப்பினும் சில வங்கிகள் எஃப்டி திட்டத்துற்கு சிறந்த வட்டியை வழங்குகின்றன. அத்தகைய வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI – State Bank of India), தனது ஒன்று மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 6.25 சதவீதம் மற்றும் 6.45 சதவீதம் வட்டி வழங்குகிறது.




ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Jana Small Finance Bank), தனது ஒன்று முதல் மூன்று ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.77 சதவீதம் வட்டி வழங்குகிறது.
இதையும் படிங்க : போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமான திட்டம் – மாதம் ரூ.5,550 பெறும் வாய்ப்பு – எப்படி முதலீடு செய்வது?
சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Suyoday Small Finance Bank), ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
உட்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
உட்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Utkarsh Small Finance Bank), தனது ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.65 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதேபோல ஈக்விடாஸ் (Equitas) மற்றும் இஎஸ்ஏஎஃப் (ESAF) ஆகிய வங்கிகள் தங்களின் நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.6 சதவீதம் வட்டி வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.