Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

PF : பிஎஃப் பணத்தை எடுப்பதில் ஊழியர்கள் சிக்கல்களை சந்திப்பது ஏன்?.. இவை தான் முக்கிய காரணங்கள்!

Reasons for PF Claim Rejection | பெரும்பாலான ஊழியர்கள் தங்களது பண தேவைகளுக்காக பிஎஃப் பணத்தை எடுத்து செலவு செய்வார்கள். அவ்வாறு அவர்கள் பிஎஃப் பணத்தை எடுக்க முயற்சி செய்யும்போது அது நிராகரிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் அதற்கான காரணங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

PF : பிஎஃப் பணத்தை எடுப்பதில் ஊழியர்கள் சிக்கல்களை சந்திப்பது ஏன்?.. இவை தான் முக்கிய காரணங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Sep 2025 00:01 AM IST

அனைத்து ஊழியர்களும் பயன்பெறும் வகையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization), ஊழியர்களின் பெயர்களின் கணக்கு தொடங்கி அதில் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து வருகிறது. ஆனால், இந்த பணத்தை எடுப்பதில் பெரும்பாலான ஊழியர்கள் சிக்கல்களை எதிர்க்கொள்கின்றனர். இந்த நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் இருந்து எந்த வித சிக்கல்களும் இல்லாமல் மிக சுலபமாக பணத்தை எடுப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஊழியர்களுக்கு சிறப்பு பலன்களை வழங்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி

இந்தியாவில் பணியாற்றும் தனியார் துறை ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. அதாவது, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் கீழ் ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்படும். இந்த கணக்கில் ஊழியர்களின் மாத வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு இதில் வரவு வைக்கப்படும். இவ்வாறு மாதம் மாதம் வரவு வைக்கப்படும் பணத்தை ஊழியர்கள் ஒருசில தேவைகளுக்காக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான ஊழியர்கள் தங்களது பணத்தை எடுப்பத்தில் சிரமத்தையும், சிக்கல்களையும் சந்திக்கின்றனர்.

இதையும் படிங்க : உங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி நிறுத்தப்பட்டுள்ளதா? காரணம் இதுதான்!

ஊழியரகள் பணத்தை பெறுவதில் சிக்கல்களை சந்திப்பது ஏன் ?

பெரும்பாலான ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை எடுப்பதில் மிகுந்த சிக்கல்களை சந்திக்கின்றனர். காரணம், பெரும்பாலான சேவைகள் நிறுவனங்களை சார்ந்தவையாக உள்ளன. உதாரணமாக ஒரு ஊழியர் தனது பிஎஃப் கணக்கில் கேஒய்சி செய்ய வேண்டும் என்றால் அவர் நிறுவனத்தின் உதவியை நாட வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுதவிர முறையற்ற பிஎஃப் கணக்கு பராமரித்தல், பல்வேறு பிஎஃப் கணக்குகள் உள்ளிட்டவை பிஎஃப் பணத்தை எடுக்கும் கோரிக்கையை நிராகரிக்கும் விதமாக அமைந்துவிடுகின்றன.

இதையும் படிங்க : மொபைல் ஆப்களில் கடன் பெறுவது உண்மையில் பாதுகாப்பானதா? – கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

பிஎஃப் பணத்தை எடுப்பதில் இத்தகைய பல சிக்கல்கள் நிலவும் நிலையில், பிஎஃப் கணக்கை முறையாக பயன்படுத்துவது, தகவல்களை உடனே புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பிஎஃப் பணத்தை மிக எளிதாக எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.