Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சில்வர் SIP என்றால் என்ன? தங்கத்தை விட வெள்ளியில் முதலீடு செய்வது சிறந்ததா?

Silver SIP : இந்தியாவின் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனை அடுத்து தங்கத்துக்கு மாற்றாக மக்கள் வெள்ளியில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த கட்டுரையில் சில்வர் சிப் என்றால் என்ன? தங்கத்தை விட சிறந்ததா என பார்க்கலாம்.

சில்வர் SIP என்றால் என்ன? தங்கத்தை விட வெள்ளியில் முதலீடு செய்வது சிறந்ததா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 24 Sep 2025 16:38 PM IST

இந்தியாவில் தங்கம் (Gold) என்றாலே நம்பிக்கைக்குரிய பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. ஆனால் தங்கம் ஏற்கனவே உச்ச நிலையை எட்டியுள்ள நிலையில், இந்த பண்டிகை காலத்தில் முதலீட்டாளர்களின் கவனம் வெள்ளியின் மீது திரும்பியுள்ளது. இந்த ஆண்டு தங்கம் தொடர்ந்து உயர்வை கண்டுள்ளது. கடந்த செப்டம்பர் 23, 2025 செவ்வாய்க்கிழமை தங்க விலை 0.8 சதவிகிதம் உயர்ந்து, ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் ரூ.3.15 லட்சம் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இந்த உயர்வால், தங்கம் பாரம்பரியமாகவே பாதுகாப்பான முதலீடாக கருதப்பட்டாலும், புதிய வளர்ச்சி வாய்ப்பை தேடும் முதலீட்டாளர்கள் சில்வர் சிப் (Silver SIP)-ன் மீது கவனம் செலுத்தி வருகிறார்கள்.

சில்வர் சிப் என்றால் என்ன?

இது குறித்து ஒரு பிரபல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ரஜனி தாண்டேல் கூறியதாவது, சில்வர் SIP என்பது, மியூச்சுவல் ஃபண்ட் சிப் போல செயல்படும். ஆனால் ஷேர், பத்திரங்கள் என்பதற்கு பதிலாக, நீங்கள் சில்வர் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இதன் மூலம் நீங்கள் வெள்ளி வாங்க வேண்டிய அவசியமில்லை. பாதுகாப்பு சிக்கல் இல்லை. உங்கள் டிமேட் (Demat) கணக்கில் டிஜிட்டல் சில்வர் சேமிக்கப்படும். விலை ஏற்றத்தாழ்வை பொருட்படுத்தாமல், நீண்ட காலத்தில் சராசரி விலையில் முதலீடு செய்ய முடியும்.

இதையும் படிக்க : வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம்.. ரூ. 84,000 கடந்து விற்பனை.. அதிர்ச்சியில் மக்கள்..

தங்கத்தை பொருத்தவரை பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.  மேலும் பணவீக்கம் அபாயங்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். வெள்ளி அதிக ஏற்ற இறக்கம் கொண்டது. ஆனால் சரியான அளவில் வளர்ச்சி இருந்தால், தங்கத்தை விட மதிப்பு அதிகம் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

வெள்ளியில் முதலீடு செய்வதால் ஏற்படும் அபாயங்கள்

  • வெள்ளியின் விலை தங்கத்தை விட வேகமாகக் குறையவும் கூடும்.

  • தொழில் துறையில் தேவை குறைந்தால் விலையும் பாதிக்கப்படும்.

  • அமெரிக்க வட்டி விகிதம், டாலர் மதிப்பு ஆகியவை நேரடியாக பாதிக்கும்.

  • இந்தியாவில் வெள்ளி சில்வர் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் புதிதாக இருப்பதால், அதன் பயன்பாடு தங்கத்துடன் ஒப்பிடும்போது குறையும்.

இதையும் படிக்க :  ஆண்டின் இறுதியில் இரண்டுமுறை ரெப்போ வட்டியை குறைக்க உள்ள ஆர்பிஐ!

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இது குறித்து நிபுணர்கள் தெரிவிப்பதாவது,

  • நீண்ட கால அளவில் லாபம் பெற வேண்டும் என்றால் தங்கமே முதன்மையான முதலீடாக இருக்க வேண்டும்.

  •  வெள்ளியை சிறிய அளவில் முதலீடு செய்வது நல்லது. இதன் மூலம் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி இரண்டையும் சமநிலையில் வைத்துக்கொள்ளலாம்

  • SIP முறையில் முதலீடு செய்தால், சரியான விலை சராசரி கிடைக்கும்.