Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Gold Price : சவரனுக்கு ரூ.3360 உயர்ந்த தங்கம்.. கடந்த 10 நாட்களில் இப்படியா? ஷாக்கில் நகை பிரியர்கள்!

Gold Price Rapidly Increased in Just 10 Days | தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது. இந்த நிலையில் செப்டம்பர் 14, 2025 முதல் செப்டம்பர் 24, 2025 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ரூ.3,360 உயர்ந்துள்ளது.

Gold Price : சவரனுக்கு ரூ.3360 உயர்ந்த தங்கம்.. கடந்த 10 நாட்களில் இப்படியா? ஷாக்கில் நகை பிரியர்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Sep 2025 11:13 AM IST

2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை (Gold Price) வரலாறு காணாத உயர்வை அடைந்து வருகிறது. குறிப்பாக 2025, செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரு கிராம் தங்கம் ரூ.10,000-த்தை தாண்டியும், ஒரு சவரன் தங்கம் ரூ.80,000-த்தை தாண்டியும் விற்பபை செய்யப்பட்டது. இந்த நிலையில் வெறும் 10 நாட்களில்  ஒரு சவரன் தங்கம் ரூ.85,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களில் தங்கம் விலை கண்டுள்ள புதிய உச்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

செப்டம்பரில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை

2025, ஜூலை மாதத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.75,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.80,000-த்தை தாண்டியது. குறிப்பாக செப்டம்பர் 06, 2025 அன்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் முதன் முறையாக ரூ.10,005-க்கும் ஒரு சவரன் ரூ.80,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஒரே நாளில் கிராமுக்கு ரூ.140 மற்றும் சவரனுக்கு ரூ.1,050 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. அது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தற்போது ஒரு சவரன் ரூ.85,000 என்ற உச்சத்தை அடைந்துள்ளது.

இதையும் படிங்க : கிரெடிட் கார்டு பயனர்களுக்கு அதிர்ச்சி.. இனி இந்த தேவைக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்த முடியாது.. ஆர்பிஐ முக்கிய உத்தரவு!

10 நாட்களில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

  • செப்டம்பர் 14, 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,220-க்கும் ஒரு சவரன் ரூ.81,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • செப்டம்பர் 15, 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,220-க்கும் ஒரு சவரன் ரூ.81,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • செப்டம்பர் 16, 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,220-க்கும் ஒரு சவரன் ரூ.82,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • செப்டம்பர் 17, 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,220-க்கும் ஒரு சவரன் ரூ.82,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • செப்டம்பர் 18, 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,220-க்கும் ஒரு சவரன் ரூ.81,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • செப்டம்பர் 19, 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,220-க்கும் ஒரு சவரன் ரூ.81,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • செப்டம்பர் 20, 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,220-க்கும் ஒரு சவரன் ரூ.82,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • செப்டம்பர் 21, 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,220-க்கும் ஒரு சவரன் ரூ.82,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • செப்டம்பர் 22, 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,220-க்கும் ஒரு சவரன் ரூ.83,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • செப்டம்பர் 23, 2025 – 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,220-க்கும் ஒரு சவரன் ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க : பால் முதல் நெய் வரை… ஜிஎஸ்டி வரி குறைப்பு – ஆவின் பால் பொருட்களின் விலை அதிரடியாக குறைப்பு

மீண்டும் ரூ.85,000-க்கு கீழ் வந்த தங்கம் விலை

நேற்று (செப்டம்பர் 23, 2025) ஒரு சவரன் தங்கம் ரூ.85,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (செப்டம்பர் 24, 2025) மீண்டும் தங்கம் விலை ரூ.85,000-க்கு கீழ் வந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.10,600 ஆகவும், ஒரு சவரன் ரூ.84,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.