எட்டா கனியாக மாறிய தங்கம்.. ஒரு சவரன் ரூ.82,000-த்தை தாண்டியது.. ஒரே நாளில் அதிரடி உயர்வு!
Gold Price Crossed 82,000 Rupees in Chennai | கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு சவரன் ரூ.82,000-த்தை தாண்டி விற்பபை செய்யப்படுகிறது.

சென்னை, செப்டம்பர் 16 : தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (செப்டம்பர் 16, 2025) மீண்டும் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. அதாவது சென்னையில் 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,280-க்கும் ஒரு சவரன் ரூ.82,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தங்கம் விலை உயர்வு குறித்து விரிவாக பார்க்கலாம்.
வரலாறு காணாத உச்சத்தை அடைந்த தங்கம் விலை
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது. குறிப்பாக செப்டம்பர் 06, 2025 அன்று தங்கம் விலை முதன் முதலாக ஒரு கிராம் ரூ.10,000-த்தை கடந்தும், ஒரு சவரன் ரூ.80,000-த்தை கடந்தும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வந்தனர். அதேபோல தங்கம் விலை மேலும் உயர்வடைந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுட்டுள்ளது.
இதையும் படிங்க : Gold Price : விண்ணை முட்டும் தங்கம் விலை.. மூன்று முக்கிய காரணங்கள் இவை தான்!
10 நாட்களில் வரலாறு படைத்த தங்கம் விலை
தங்கம் விலை கடந்த 10 நாட்களில் மட்டும் கடுமையான விலை உயர்வை சந்தித்து ஒரு சவரன் ரூ.82,000-த்தை தாண்டியுள்ளது.
தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
செப்டம்பர் 07, 2025 | ரூ.10,500 | ரூ.80,040 |
செப்டம்பர் 08, 2025 | ரூ.10,060 | ரூ.80,040 |
செப்டம்பர் 09, 2025 | ரூ.10,150 | ரூ.81,200 |
செப்டம்பர் 10, 2025 | ரூ.10,150 | ரூ.81,200 |
செப்டம்பர் 11, 2025 | ரூ.10,150 | ரூ.81,200 |
செப்டம்பர் 12, 2025 | ரூ.10,240 | ரூ.81,920 |
செப்டம்பர் 13, 2025 | ரூ.10,220 | ரூ.81,760 |
செப்டம்பர் 14, 2025 | ரூ.10,220 | ரூ.81,760 |
செப்டம்பர் 15, 2025 | ரூ.10,210 | ரூ.81,680 |
செப்டம்பர் 16, 2025 | ரூ.10,280 | ரூ.82,240 |
இதையும் படிங்க : தீபாவளிக்கு அறிமுகமாகும் ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி? வெளியான ஹேப்பி நியூஸ்!
ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
நேற்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,210-க்கும், ஒரு சவரன் ரூ.81,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 16, 2025) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,280-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இவ்வாறு தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில், இனிமேல் தங்கமே வாங்க முடியாத நிலை ஏற்படுமோ என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.