Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Gold Price : விண்ணை முட்டும் தங்கம் விலை.. மூன்று முக்கிய காரணங்கள் இவை தான்!

Gold Records High Price in History | தங்கம் விலை கடந்த சில நாட்களாக கடும் விலை உயர்வை அடைந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. இதற்கு மூன்று முக்கிய காரணிகள் உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Gold Price : விண்ணை முட்டும் தங்கம் விலை.. மூன்று முக்கிய காரணங்கள் இவை தான்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Sep 2025 11:53 AM IST

தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களாகவே கடும் விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில், தற்போது வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது, தற்போதைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.10,000-த்தை தாண்டியும், ஒரு சவரன் தங்கம் ரூ.81,000-த்தை தாண்டியும் விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலை நீடித்தால் தங்கம் சாமானிய மக்களின் எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. தங்கம் விலை இவ்வளவு கடுமையான விலை உயர்வை சந்தித்ததற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ள தங்கம் விலை

கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலை ஒரு சவரன் ரூ.78,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில நாட்களில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் காரணமாக தங்கம் விலை ரூ.80,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக செப்டம்பர் 06, 2025 அன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,050-க்கும் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 13, 2025) ஒரு கிராம் தங்கம் ரூ.10,220-க்கும், ஒரு சவரன் ரூ.81,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : Gold : தீபாவளிக்கு தங்கம் வாங்க முடியாதா?.. தங்கம் விலை உயர்வின் தாக்கம் என்னவாக இருக்கும்?

தங்கம் விலை உயர்வுக்கான மூன்று முக்கிய காரணங்கள்

தங்கம் விலை உயர்வுக்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் பெடரல் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது

அமெரிக்காவின் பொருளாதாரம் மிகவும் பலவீனமான சூழலில் உள்ளது. அங்கு வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில், குறைந்த அளவிலான வேலை வாய்ப்புகளே உள்ளன. இதன் காரணமாக அங்கு பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க அரசு பெடரல் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இது தங்கம் விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பான முதலீடு மற்றும் பதற்றம்

புவிசார் அரசியல் பதட்டங்கள் முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி செல்ல தூண்டுகிறது. உலக அளவில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் நிலையில், அதில் முதலீடு செய்கின்றனர். இதுவும் தங்கம் விலை உயர்வுக்கான முக்கிய காரணமாக உள்ளது.

இதையும் படிங்க : அமேசான், ஃபிளிப்கார்ட்டில் கிடைக்கும் நோ காஸ்ட் EMI – உண்மையில் இலவசமா? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

அதிக தங்கம் வாங்கும் உலக வங்கிகள்

உலக வங்கிகள் அதிக அளவு தங்கத்தை வாங்கி சேமிப்பது மற்றும் அமெரிக்க டாலரின் நிலையற்ற தன்மை ஆகியவை கூடுதல் காரணங்களாக அமைந்துள்ளன.