லைஃப் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸிற்கு ஜிஎஸ்டி நீக்கம்: உண்மையில் எவ்வளவு சேமிக்க முடியும்?
GST Update: இந்தியாவில் தனி நபர் காப்பீடுகளுக்கு ஜிஸ்டி வரி நீக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரி நீக்கம் செப்டம்பர் 22, 2025 அன்று முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. இதனையடுத்து இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை குறையும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஜிஎஸ்டி (GST) கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ள நிலையில் லைப் இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ்களுக்கு (Health Insurance) விதிக்கப்பட்ட 18 சதவிகிதம் ஜிஎஸ்டி நீக்கப்பட்டுள்ளது. இந்த முறை வருகிற செப்டம்பர் 22, 2025 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. இதனால் மக்கள் இன்சூரன்ஸிற்காக செலுத்தும் ப்ரீமியம் கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன்னதாக 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில் ஆண்டுக்கு 3,600 வரை கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. தற்போது ஜிஎஸ்டி நீக்கப்பட்டதால் எவ்வளவு கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதுவரை ஜிஎஸ்டியாக நாம் செலுத்திய கட்டணம்
முன்பு பெரும்பாலான லைஃப் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ரீமியங்களில் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி சேர்க்கப்பட்டிருந்தது. உதாரணமாக ஆண்டுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ்க்கு ரூ.20,000 ப்ரீமியம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தால், அதற்கு ஜிஎஸ்டி 18 சதவிகிதத்துடன் ரூ.3,600 கூடுதலாக சேர்த்து ரூ.23,600 செலுத்த வேண்டியிருக்கும். இதே போல லைஃப் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு ரூ.15,000 கட்டணத்துடன் கூடுதலாக 18 சதவிகிதம் ஜிஎஸ்டி சேர்த்து ரூ.2,700 சேர்த்து மொத்தம் ரூ.17, 700 செலுத்த வேண்டியிருக்கும்.
இதையும் படிக்க : இந்தியாவில் உள்ள கார் இன்சூரன்ஸ் வகைகள் என்ன? சிறந்ததை தேர்ந்தெடுப்பது எப்படி?




உண்மையில் பிரீமியம் குறையுமா?
இதனால் நாம் செலுத்த ஜிஎஸ்டி வரி செலுத்த தேவையில்லை என்பதால் கூடுதலாக பணம் செலுத்த வேண்டியதில்லை என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்ரனர். ஆனால் நாம் செலுத்தும் கட்டணம் பெரிதாக குறையாது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். முன்னதாக காப்பீடு நிறுவனங்கள் இன்புட் டாக்ஸ் கிரெடிட் (Input Tax Credit) என்ற வரிவிலக்கு நன்மையை பெற்றிருந்தனர். அதாவது ஜிஎஸ்டி வரி செலுத்தினாலும் பின்னர் திரும்ப பெறும் சலுகை காப்பீடு நிறுவனங்களுக்கு கிடைத்தது. தற்போது அந்த இன்புட் டாக்ஸ் கிரெடிட் நீக்கப்பட்டுள்ளதால், ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டுள்ளதன் முழு பலனும் நமக்கு கிடைக்காது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
காப்பீடு வகைகளில் வேறுபாடு
- இதன் ஒரு பகுதியாக ரூ.5 லட்சம் வரை உள்ள தனி நபர் மருத்துவ காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- அதே போல டெர்ம் இன்சூரன்ஸ் மற்றும் குடும்பத்துடன் சேர்த்து எடுக்கப்படும் காப்பீடுகளுக்கு முழு விலக்கு கிடைக்கும்.
- ஆனால் நிறுவனங்கள் அவர்கள் பணியாளர்களுக்கு வழங்கும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்கும்.
இதையும் படிக்க : ஜிஎஸ்டி குறைப்பு… 40 இஞ்ச் டிவி மற்றும் 1.5 டன் ஏசியின் விலை எவ்வளவு குறையும்?
தற்போது ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டுள்ள நிலையில் காப்பீடுக்கான பிரீமியம் குறையும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து புதிய காப்பீடு எடுக்க நினைப்பவர்கள் செப்டம்பர் 22, 2025 வரை காத்திருந்து எடுப்பது நன்மை தரும். ஆனால் காப்பீட்டு நிறுவனங்கள் இந்த நன்மையை மக்களுக்கு வழங்குகின்றன என்பதை பொறுத்து தேர்ந்தெடுப்பது நல்லது.