Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

GST 2.0 : ஜிஎஸ்டியில் வந்த முக்கிய மாற்றம்.. அதிரடியாக விலை உயரும் பொருட்கள்.. பட்டியல் இதோ!

GST 2.0 Hikes Price for These Products | ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மத்திய அரசு முக்கிய மாற்றம் செய்துள்ளது. அதாவது 4 அடுக்காக இருந்த வரி விதிப்பு முறையை வெறும் 2 அடுக்காக மாற்றியுள்ளது. இதன் காரணமாக சில பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது.

GST 2.0 : ஜிஎஸ்டியில் வந்த முக்கிய மாற்றம்.. அதிரடியாக விலை உயரும் பொருட்கள்.. பட்டியல் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 04 Sep 2025 12:56 PM IST

இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் நான்கு அடுக்கு ஜிஎஸ்டி (GST – Good and Services Tax) வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டு, இரண்டு அடுக்கு வரி விதிப்பு முறையாக மாற உள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (செப்டம்பர் 03, 2025) அறிவித்தார். அதாவது, இந்தியாவில் நடைமுறையில் உள்ள நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை இரண்டு அடுக்காக ஜிஎஸ்டி கவுன்சில் (GST Council) அனுமதி வழங்கியுள்ள நிலையில், செப்டம்பர் 22, 2025 முதல் இந்த புதிய வரி விதிப்பு முறை அமலுக்கு வர உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் மாற்றம் காரணமாக என்ன என்ன பொருட்களின் விலை உயரும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை

நாட்டின் 79வது சுதந்திர தின விழாவின் போது நாட்டு மக்களிடையே உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் முக்கிய மாற்றம் வரும். இந்த மாற்றம் காரணமாக சாமானிய மக்கள் பயனடைவார்கள் என்று கூறினார். இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 03, 2025) நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 5%, 12%, 18% மற்றும் 28% நான்கு அடுக்கு வரிமுறையை வெறும் இரண்டு அடுக்குகளாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி அளித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த புதிய வரி முறை செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க : GST: வணிக நிறுவனங்களுக்கான சுமையை குறைக்கும் திட்டம் – ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்

விலை அதிகரிக்க போகும் பொருட்கள்

இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சில பொருட்களின் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ள நிலையில், சில பொருட்களின் ஜிஎஸ்டி அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பொருட்களின் விலை உயரப்போகிறது.

  • புகையிலை, பான்மசாலா, ஆடம்பர இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி 40 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.
  • ரூ.2,500-க்கும் அதிகமான ஆடைகளுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.
  • நிலக்கரி உள்ளிட்ட எரிபொருட்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளதன் காரணமாக சில பொருட்களின் விலை குறைந்துள்ள நிலையில், சில பொருட்களின் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.