GST: வணிக நிறுவனங்களுக்கான சுமையை குறைக்கும் திட்டம் – ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்
GST council : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 3, 2025 அன்று துவங்கி இரண்டு நாள் நிகழ்வாக நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வணிக நிறுவனங்களுக்கான சுமையை குறைக்கும் நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜிஎஸ்டி (GST) கவுண்சில் மீட்டிங் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செப்டம்பர் 3, செப்டம்பர் 4, 2025 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் அத்தியாவசிய பொருட்களின் ஜிஎஸ்டி குறையும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் 5 சதவிகிதமாகவும், பிற பொதுவான பொருட்களுக்கு 18 சதவிகிதம் என இரண்டு வகைகளாக பிரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செப்டம்பர் 1, 2025 அன்று நடைபெற்ற ஜிெஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வணிக நிறுவனங்களுக்கான சுமையை குறைப்பதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என என்டிடிவி இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
ஒப்புதல் பெற்ற முக்கிய அம்சங்கள்
- சிறு குறு வணி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்யும் காலம் 30 நாட்களில் இருந்து 3 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
- ஏற்றுமதி செய்யப்படும் நிறுவனங்களுக்கு தானாக ஜிஎஸ்டி திருப்பி அளிக்கும் முறைக்கு (Automated GST Refund) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி நிறுவனங்கள் ஜிஎஸ்டி உடனடியாக பணம் திரும்ப பெற முடியும்.
இதையும் படிக்க : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – டூத் பேஸ்ட் முதல் கார் வரை… எந்தெந்த பொருட்களுக்கு வரி குறையும்?
இன்றைய ஜிஎஸ்டி கவுண்சில் கூட்டம் ஜிஎஸ்டி வரிப்பிரிவு சரி செய்தல் என்ற தலைப்பின் கீழ் தொடங்கியது. தற்போது நடைமுறையில் 5%, 12%, 18%, 28% என நான்கு வகைகளில் கீழ் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படுகிறது. தற்போது 28 சதவிகிதத்தின் கீழ் இருக்கும் 90% பொருட்களை 18 சதவிகிதத்துக்கு மாற்றப்படவுள்ளது. அதே போல 12 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட பொருட்கள், 5 சதவிகிதத்துக்கு மாற்றப்படவுள்ளது. இந்த நடவடிக்கை உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, ரூ.50,000 கோடி வருவாய் இழப்பை சரி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயனடையும் துறைகள்
- தொழில்துறையைப் பொறுத்தவரை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, ஆட்டோமொபைல், கைவினை பொருட்கள் உற்பத்தி, விவசாயம், மருத்துவம், காப்பீட்டுத்துறை ஆகியவை பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அதே போல லைஃப் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் போன்ற சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- புகையிலை பொருட்கள், மதுபானங்கள் ஆகியவை என்ற பாவ பொருட்கள் (Sin Goods) என்ற பிரிவில் தொடரும். விலை உயர்வான கார்கள் பழைய நடைமுறையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : ஷாம்பூ முதல் ஹைபிரிட் கார்கள் வரை.. ஜிஎஸ்டி மாற்றத்தால் அதிரடியாக குறையபோகும் விலை?
நடுத்தர வர்க்கத்தினர் தினசரி பயன்படுத்தும் பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தியாளர்கள் விலையை குறைக்க ஊக்குவிக்கப்படுவார்கள் என்பதால், விற்பனை அதிகரிக்கும். இதன் மூலம் உற்பத்தியும் அதிகரிக்கும். விலை குறைந்தாலும் விற்பனை அதிகரிக்கும் என்பதால், உற்பத்தியாளர்கள் இழப்பை சரி செய்யலாம் ஆட்டோமொபைல் போன்ற தொழில்களில் அதிக வேலைவாய்ப்பு உருவாகும்.