GST : ஷாம்பூ முதல் ஹைபிரிட் கார்கள் வரை.. ஜிஎஸ்டி மாற்றத்தால் அதிரடியாக குறையபோகும் விலை?
Diwali GST Changes | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாமானிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் முக்கிய மாற்றம் வரும் என பிரதமர் அறிவித்தார். அதன்படி, ஷாம்பூ முதல் ஹைபிரிட் கார்கள் வரை விலை குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி (GST – Goods and Services Tax) வரி விதிப்பு முறையில் முக்கிய மாற்றம் வர உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) அறிவித்துள்ளார். இதன் காரணமாக சில அத்தியவசிய பொருட்கள் மற்றும் மின்சாதன பொருட்களின் விலை குறையும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஷாம்பூ (Shampoo), தொலைக்காட்சிகள், ஹைபிரிட் கார்கள் (Hybrid Cars) உள்ளிட்டவற்றின் ஜிஎஸ்டி குறைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், அவற்றின் விலையும் குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் வரவுள்ள முக்கிய மாற்றம்
பிரதமர் நரேந்திர மோடியின் ஜிஎஸ்டி அறிவிப்பை தொடர்ந்ந்து சுமார் 175 பொருட்களுக்கு 10 சதவீதம் வரை ஜிஎஸ்டியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 79வது சுதந்திர தின விழாவில் நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், சாமானிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மாற்றம் கொண்டுவர உள்ளதாக கூறினார். அதனை தொடர்ந்து இந்தியர்கள் இந்திய பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க : GST 2.0: ஜிஎஸ்டி 2.0.. பால், பட்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறையுமா?




ஷாம்பூ முதல் தொலைக்காட்சி வரை – குறையும் விலை?
இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மேற்கொள்ள உள்ள மாற்றம் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்த கூடிய டூத்பேஸ்ட் (Toothpaste), ஷாம்பூ, பவுடர் (Powder) உள்ளிட்ட பொருட்களின் விலையை 18 சதவீதத்தில் இருந்து வெறும் 5 சதவீதமாக குறைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல, ஏசி மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்களின் ஜிஎஸ்டி குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பொருட்களுக்கு தற்போது 28 சதவீதம் வரி விதிகப்படும் நிலையில், அது 18 சதவீதமாக குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : பெற்றோர் அனுப்பும் பணத்துக்கு வரி செலுத்தணுமா? உண்மை என்ன?
ஹைபிரிட் கார்களுக்கான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க கோரி இந்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு ஜிஎஸ்டி குறைக்கப்படும் பட்சத்தில் சிறிய ரக ஹைபிரிட் கார்களின் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மின்சார கார்களின் ஜிஎஸ்டி வெறும் 5 சதவீதமாக குறையும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.