வந்தாச்சு குட் நியூஸ்.. கேஸ் சிலிண்டர் விலை அதிரடி குறைவு.. எவ்வளவு தெரியுமா?
Commercial Gas Cylinder Price Reduced | ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில் செப்டம்பர் 01, 2025 ஆன இன்று கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்துள்ளது.

சென்னை, செப்டம்பர் 01 : ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலை (Gas Cylinder Price) தீர்மானம் செய்யப்படும். அந்த வகையில் இன்று (செப்டம்பர் 01, 2025) என்பதால் கேஸ் சிலிண்டர் விலையில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை குறைத்து (Commercial Gas Cylinder Price Reduced) எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில், தற்போதைய விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மாத தொடக்கத்தில் விலையை மாற்றி அமைக்கும் எண்ணெய் நிறுவனங்கள்
பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு (Central Government) அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்து வருகின்றன. அந்த வகையில், செப்டம்பர் மாதம் இன்று (செப்டம்பர் 01, 2025) தொடங்கியுள்ள நிலையில், வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : GST 2.0: ஜிஎஸ்டி 2.0.. பால், பட்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறையுமா?
வணிக சிலிண்டர் விலை குறைவு
எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பின் படி, சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையில் ரூ.50 அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரூ.1,789 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை தற்போது வெறும் ரூ.1,738 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மட்டுமன்றி கொல்கத்தா, மும்பையிலும் இந்த வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஒரு லிட்டர் பெட்ரோலில் எண்ணெய் நிறுவனங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
வீட்டு உபயோக சிலிண்டர் விலை நிலவரம்
இந்த மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் காரணமாக சென்னையில், வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.868-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.