Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கேஸ் சிலிண்டர் விலை முதல் ஓய்வூதிய திட்டம் வரை.. செப்டம்பர் மாதம் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

September 2025 Changes | ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலை முதல் ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். அந்த வகையில் இன்னும் சில நாட்களில் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில், முக்கிய மாற்றங்கள் வர உள்ளது.

கேஸ் சிலிண்டர் விலை முதல் ஓய்வூதிய திட்டம் வரை.. செப்டம்பர் மாதம் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Aug 2025 12:29 PM

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலை (Gas Cylinder Price) முதல் ஆதார் கார்டு (Aadhaar Card), கிரெடிட் கார்டு (Credit Card) உள்ளிட்டவற்றில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்படும். 2025, ஆகஸ்ட் மாதம் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், விரைவில் 2025, செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், வழக்கத்தை போலவே செப்டம்பர் மாதத்திலும் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. அது என்ன என்ன மாற்றங்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2025, செப்டம்பர் மாதம் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்

கேஸ் சிலிண்டர் விலை

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும். இதன் காரணமாக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், செப்டம்பர் மாதத்திலும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்க வேண்டுமா?.. அப்போது இந்த திட்டத்துல இப்படி முதலீடு செய்யுங்க!

அஞ்சல் சேவைகளில் மாற்றம்

இந்தியா போஸ்ட், பதிவு செய்யப்பட்ட அஞ்சல்கள் (Registered Post), விரைவு அஞ்சல் சேவையுடன் (Speed Post) இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு சேவையை தொடர்ந்து செப்டம்பர் 01, 2025 அன்று முதல் அனுப்பப்படும் பதிவு தபால் இப்போது நேரடியாக விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்

வருமான வரி வரம்புகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அந்த வகையில், 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய அரசு அறிவித்துள்ளது. அதற்கான காலக்கெடு செப்டம்பர் 15, 2025 உடன் முடிவடைகிறது. எனவே அன்றைய தினத்திற்குள்ளாக அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என அரசு கூறியுள்ளது.

இதையும் படிங்க : ஹெல்த் மற்றும் லைஃப் இன்சூரன்ஸிற்கான ஜிஎஸ்டி 18% குறைய வாய்ப்பு?

ஓய்வூதிய திட்டம்

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் (UPS – Unified Pension Scheme) கீழ் பயன்பெற்று வரும் மத்திய அரசு ஊழியர்கள் இப்போது தேசிய ஓய்வூதிய முறைக்கு (NPS – National Pension Scheme) மாறலாம் என நிதியமைச்சகம் கூறியுள்ளது. இந்த வசதி ஒருமுறை, ஒரு வழி மாறுதல் விருப்பமாக உள்ளது. அதாவது, ஒருமுறை ஒருவர் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் இருந்து தேசிய ஓய்வூதிய முறைக்கு மாறிவிட்டால் அவரால் மீண்டும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மாற முடியாது.