Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – டூத் பேஸ்ட் முதல் கார் வரை… எந்தெந்த பொருட்களுக்கு வரி குறையும்?

GST Council : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 3, 2025 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறவிருக்கிறது. எந்நதெந்த பொருட்களுக்கு எல்லாம் ஜிஎஸ்டி குறையும் என எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் –  டூத் பேஸ்ட் முதல் கார் வரை… எந்தெந்த பொருட்களுக்கு வரி குறையும்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Sep 2025 15:13 PM

இந்தியாவில் 58வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 3, 2025 மற்றும் செப்டம்பர் 4, 2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் ஜிஎஸ்டி (GST) கவுன்சில் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. இந்த கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறவிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தனது சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டியில் மாற்றங்கள் வரவுள்ளதாக அறிவித்த நிலையில், இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் அது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அத்தியாவசியாக பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறையும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

முக்கிய அம்சங்கள்

தற்போது 5%, 12%, 18%, 28% என நான்கு வகை ஜிஸ்டி வரி விகிதங்கள் நடைமுறையில் இருக்கின்றன. அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாதவு அத்தியாவசிய பொருட்கள் 5 சதவிகிதமாகவும், பிற பொதுவான பொருட்களுக்கு 18 சதவிகிதம் என இரண்டு வகைகளாக பிரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கூடுதலாக புகையிலை, மதுபானம், சொகுசு கார்கள் போன்றவற்றுக்கு 40 சதவிகிதம் சிறப்பு வரி விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மொத்தம் 175க்கும் மேற்பட்ட பொருட்களில் வரி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கவுன்சிலின் முக்கிய குழு உறுப்பினர் இந்த இரண்டு வகை ஜிஎஸ்டி வரி விகிதங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையும் படிக்க : ஜிஎஸ்டி குறையும் என எதிர்பார்ப்பு… கடும் சரிவை சந்திக்கும் கார் விற்பனை

எதுக்கு எவ்வளவு வரி குறைப்பு?

  • அத்தியாவசிய பொருட்களான டூத் பேஸ்ட், ஷாம்பு, சோப், டால்கம் பவுடர் ஆகியவை 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்படவிருக்கிறது.
  • மேலும் வெண்ணெய், சீஸ், முறுக்கு, சிப்ஸ் போன்ற உடனடியாக சாப்பிடக் கூடிய ஸ்நாக்ஸ் உணவுகள் ஆகியவை 18% மற்றும் 12% சதவிகிதமாக குறையும் என எதிர்பார்க்கப்பபடுகிறது.
  • உணவுகள், துணிகள் போன்ற பொருட்களுக்கு 5 சதவிகிதத்தின் கீழ் கொண்டுவரப்படவிருக்கிறது.
  • டிவி, ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற எலக்ட்ரானிக் பொரருட்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைந்துள்ளது.
  • சிமெண்ட் பொருட்கள் 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ஷாம்பூ முதல் ஹைபிரிட் கார்கள் வரை.. ஜிஎஸ்டி மாற்றத்தால் அதிரடியாக குறையபோகும் விலை?

வாகனங்கள்

  • வாகனங்களை பொருத்தவரை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 1200சிசி வரை உள்ள சிறிய பெட்ரோல் கார்களுக்கான ஜிஎஸ்டி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • சிறிய ஹைபிரிட் கார்களுக்கு 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • ரூ.20 லட்சம் முதல் 40 லட்சம் வரை உள்ள எலக்ட்ரிக் கார்களுக்கு 5 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறையவுள்ளது.
  • குறிப்பாக ரூ. 40 லட்சத்துக்கும் மேல் அதிக விலையுள்ள எலக்ட்ரிக் கார்களுக்கு 40 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறு.
  • இரு சக்கர வாகனங்களுக்கு 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைய வாய்ப்பிருக்கிறது.
  • அதே நேரம் 350 சிசிக்கு மேற்பட்ட பைக்குகளுக்கு 40 சதவிகிதம் வரி விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.