Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜிஎஸ்டி குறையும் என எதிர்பார்ப்பு… கடும் சரிவை சந்திக்கும் கார் விற்பனை

Car Sales Drop : பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி விரிவிதிப்பில் மாற்றங்கள் வர உள்ளதாக அறிவித்திருந்தார். இதன் காரணமாக இந்தியாவில் கார் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. மக்கள் கார்களுக்கான ஜிஎஸ்டி குறையும் என எதிர்பார்ப்பதே இதற்கு காரணம்.

ஜிஎஸ்டி குறையும் என எதிர்பார்ப்பு… கடும் சரிவை சந்திக்கும் கார் விற்பனை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 02 Sep 2025 16:02 PM

பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தனது சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி (GST) வரியில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் இந்தியாவில் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கார்களுக்கான ஜிஎஸ்டி குறையும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் கடந்த ஆகஸ்ட், 2025 மாதம் கார்களின் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. கார்களுக்கான ஜிஎஸ்டி குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கார்களுக்கான விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை மனதில் வைத்து வாடிக்கையாளர்கள் கார் வாங்கும் முடிவை தள்ளிவைத்துள்ளனர்.

கார்களின் விற்பனை கடும் சரிவு

மாருது சுசூகி

மாருதி சுசூகியைப் பொறுத்த வரை கடந்த ஆகஸ்ட், 2025 மாதத்தில் 1,31,278 கார்கள் மட்டுமே விற்கப்பட்டது. இது கடந்த 2024 ஆம் ஆண்டு அதே மாதத்தில் 1, 43,075 கார்கள் விற்கப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் வைத்து பார்க்கும்போது கடந்த ஆண்டை விட, தற்போது 8 சதவிகிதம்சரிவை சந்தித்துள்ளது.

குறிப்பாக மாருதி சுசூகி நிறுவனத்தின் மினி கார் வகைகளில் ஆல்டோ, எஸ்-பிரெஸோ ஆகியவை மிக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இந்தியாவில் இந்த இரண்டு கார்களும் 6,853 மட்டுமே விற்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது 36 சதவிகிதம் வீழ்ச்சி என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : கேபிள் டிவி கட்டணம் குறையுமா? ஜிஎஸ்டியை குறைக்க கோரிக்கை

யூட்டிலிட்டி வாகன விற்பனையும் 14 சதவிகிதம் குறைந்துள்ளது. அதன் படி ஆகஸ்ட், 2025 மாதத்தில் 54,043 கார்கள் மட்டுமே விற்கப்பட்டிருக்கின்றன.

  • அதே போல மகிந்திராவை பொறுத்த வரை எஸ்யூவி கார்களின் விற்பனை 9 சதவிகிதம் குறைந்துள்ளது. தற்போது வரை 39,399 கார்கள் மட்டுமே விற்கப்பட்டிருக்கின்றன.
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களின் விற்பனை 7 சதவிகிதமாக குறைந்துள்ளது. தற்போது அந்த நிறுவனத்தின் கார்கள் 41,001 ஆக சரிவை சந்தித்துள்ளது.
  • ஹூண்டாய் கார்களின் விற்பனை 11 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தை பொறுத்தவரை 44,001 கார்கள் மட்டுமே விற்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக மகிந்திரா நிறுவனத்தின் சிஇஓ நளினிகாந்த் கொல்லகுண்டா, கடந்த ஆகஸ்ட் 2025 மாதத்தில் எஸ்யூவி சந்தையை பொறுத்தவரை, மக்களிடையே ஜிஎஸ்டி குறையும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் தற்போது கார்களின் விற்பனை சரிந்துள்ளது. இருப்பினும் ஜிஎஸ்டி குறையும்போது கார்களின் விற்பனை அதிகரிக்கும். அப்போது பாதிப்பு சரி செய்யப்படும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

இதையும் படிக்க : ஜிஎஸ்டி 2.0.. பால், பட்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறையுமா?

கார்களுக்கான ஜிஎஸ்டி வரிவிகிதங்கள்

  • தற்போது சிறிய கார்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டடுள்ளன.
  • பெரிய கார்கள் மற்றும் எஸ்யூவிக்களுக்கு 43 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் புதிய வரிவிதிப்பின் படி சிறிய கார்கள் மற்றும் 350சிசி கீழ் உள்ள இரு சக்கர வாகனங்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவிகிதமாக குறைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே போல அதிக விலையுள்ள கார்கள் மற்றும் எஸ்யூவிக்கள் 40 சதவிகிதத்திற்கு குறைவாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  இந்தியாவில் கார்கள் விற்பனை சரிந்து வரும் நிலையில், கார் நிறுவனங்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்தி வருகின்றன. ம