வீடு கட்ட போறீங்களா.. குட் நியூஸ்.. அதிரடியாக விலை குறையப்போகும் கட்டுமன பொருட்களின் விலை!
Housing Materials Prices to Drop | ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மாற்றம் கொண்டுவர ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. அதாவது தற்போது நடைமுறையில் உள்ள 4 அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை வெறும் இரண்டு அடுக்குகளாக குறைய உள்ளது.

இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள நான்கு அடக்கு ஜிஎஸ்டி (GST – Goods and Services Tax) வரி விதிப்பு முறை, வெறும் இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு முறை காரணமாக பல பொருட்களின் ஜிஎஸ்டி குறைய உள்ளது. அந்த வகையில், வீட்டு கட்டுமான பொருட்களின் ஜிஎஸ்டி குறைந்து அவற்றின் விலை குறைய உள்ளது. இந்த நிலையில், வீட்டு கட்டுமான பொருட்களின் ஜிஎஸ்டி எவ்வளவு குறைய உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் வரப்போகும் அதிரடி மாற்றம்
தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் முக்கிய மாற்றம் வரும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) அறிவித்தார். அவ்வாறு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் பட்சத்தில், அது சாமானியர்களுக்கு பயனளிக்கும் என்று அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் நடைமுறையில் உள்ள 4 அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை வெறும் 2 அடுக்குகளாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளதாக அறிவித்தார். இவ்வாறு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை வெறும் இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டு விலை குறையும் நிலை உள்ளது.
இதையும் படிங்க : GST 2.0 : ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் வரும் மாற்றம்.. தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா?




கட்டுமான பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறைகிறது?
- சிமெண்டுக்கு 28 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது.
- செங்கலுக்கு 12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது.
- மண் மற்றும் சுண்ணாம்பு கலவை கற்களுக்கு 12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது.
- கிரானைட், மார்பிள் போன்ற கற்களுக்களுக்கு 12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது.
- டைல்ஸ், இரும்பு கம்பிகள், பெயிண்ட் உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி வரியில் இந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை.
- அதாவது டைல்ஸ், இரும்பு கம்பிகள், பெயிண்ட் உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி ஏற்கனவே நடைமுறையில் உள்ள 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி அப்படியே தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : GST 2.0 : ஜிஎஸ்டியில் வந்த முக்கிய மாற்றம்.. அதிரடியாக விலை உயரும் பொருட்கள்.. பட்டியல் இதோ!
ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுவதன் காரணமாக மேற்குறிப்பிட்டுள்ள இந்த பொருட்களின் விலை குறைய உள்ளது குறிப்பிடத்தக்கது.