GST 2.0 : டூத் பேஸ்ட் முதல் கார் வரை.. அதிரடியாக குறைந்த ஜிஎஸ்டி.. விலையும் குறையும்!
GST Rate Cut Impact Price Reduction | இந்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் முக்கிய மாற்றம் மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக சில பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. அது என்ன என்ன பொருட்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி (GST – Good and Services Tax) வரி விதிப்பு முறையில் முக்கிய மாற்றம் வரும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) அறிவித்திருந்த நிலையில், அதன்படி ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது நான்கு அடுக்காக இருந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை தற்போது வெறும் இரண்டு அடுக்காக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் அடிப்படையில் எந்த எந்த பொருட்களின் ஜிஎஸ்டி குறைய உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு – பட்டியல் இதோ
தற்போதுள்ள நடைமுறையில் உள்ள 5, 12, 18 மற்றும் 28 சதவீத நான்கு வரி ஜிஎஸ்டி அடுக்குகள் 18 சதவீதம், 5 சதவீதம் என குறைக்கப்படும் பட்சத்தில் கீழ் குறிப்பிட்டுள்ள பொருட்களின் விலை குறையும்.
ஆட்டோமொபைல்
கார், இருசக்கர வாகனங்களுக்கு தற்போது 28 சதவீதமாக உள்ள ஜிஎஸ்ட, 18 சதவீதமாக குறையும்.




பொழுதுபோக்கு
தங்கும் விடுதிகள், சினிமா டிக்கெட்டுகளுக்கான தற்போதுள்ள 12 சதவீத ஜிஎஸ்டி வெறும் 5 சதவீதமாக குறையும்.
அத்தியாவசிய பொருட்கள்
பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சீஸ், பாஸ்தா, ஐஸ் கிரீம் உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து வெறும் 5 சதவீதமாக குறைக்கப்படும். இதேபோல டூத் பேஸ்ட், ஷாம்பூ, எண்ணெய் மற்றும் சோப்புக்கான வரி 18 சதவீதத்தில் இருந்து வெறும் 5 சதவீதமாக குறையும்.
இதையும் படிங்க : 2028-க்குள் வெள்ளி விலை ரூ.2 லட்சத்தை எட்டும்.. அடித்து சொல்லும் பொருளாதார வல்லுநர்கள்!
நுகர்வு நடவடிக்கை வேகமெடுக்கும் – மத்திய அரசு நம்பிக்கை
4 அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ள பட்சத்தில் சில பொருட்களுக்கு முழுவதுமாக ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மேற்குறிப்பிட்டுள்ள இந்த பொருட்களின் ஜிஎஸ்டி பெரும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி குறைப்பு நடவடிக்கையால் மத்திய அரசுக்கு சுமார் 50,000 கோடி மதிப்பில் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இருப்பினும் ஜிஎஸ்டி குறைப்பு நடவடிக்கையின் மூலம் உள்நாட்டு சந்தையில் நுகர்வு நடவடிக்கைகள் வேகமெடுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.