Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

GST 2.0 : பால் முதல் புற்றுநோய் மருத்து வரை.. இந்த பொருட்களுக்கு இனி ஜிஎஸ்டி இல்லை.. பட்டியல் இதோ!

GST Free Products in India | பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு வாக்குறுதியின் அடிப்படையில் ஜிஎஸ்டி முறையில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

GST 2.0 : பால் முதல் புற்றுநோய் மருத்து வரை.. இந்த பொருட்களுக்கு இனி ஜிஎஸ்டி இல்லை.. பட்டியல் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 04 Sep 2025 07:54 AM

இந்தியாவில் அமலில் உள்ள நான்கு அடுக்கு ஜிஎஸ்டி (GST – Goods and Services Tax) வரி விதிப்பு முறையில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை வெறும் இரண்டு அடுக்கு முறையாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் (GST Council) ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த அதிரடி மாற்றம் செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வர உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முக்கிய மாற்றம் காரணமாக சில பொருட்கள் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு பெருகின்றன. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் வந்த முக்கிய மாற்றம்

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் முக்கிய மாற்றம் வரும் என கூறினார். இதன் காரணமாக சாமானியர்கள் பயன்பெறும் வகையில், அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என்றும் அவர் கூறியிருந்தார். இதன் காரணமாக பெரிய எதிர்ப்பார்ப்புகள் எழுந்து வந்தன. செப்டர்மபர் 03, 2025 மற்றும் செப்டர்மபர் 04, 2025 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டது.

இதையும் படிங்க : வந்தாச்சு 9 காரட் தங்கம்.. ஒரு சவரன் வெறும் 40,000 தான்.. இனி எல்லாருமே தங்கம் வாங்கலாம்!

இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று (செப்டம்பர் 03, 2025) கூடியது. கூட்டத்தின் முதல் நாளே ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டது. இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5, 12, 18, 28 என நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டியை வெறும் இரண்டு அடுக்குகளாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அதன் மூலம் பல்வேறு பொருட்களின் விலை குறைய உள்ளதாகவும், இந்த ஜிஎஸ்டி திருத்தம் செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் கூறினார்.

ஜிஎஸ்டி விலக்கு பெரும் பொருட்கள்

அத்தியாவசிய பொருட்கள்

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் வந்துள்ள முக்கிய மாற்றம் காரணமாக சில பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட உள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அதாவது பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால், சென்னா, பன்னீர், ரொட்டி, இந்திய பிரட்டுகள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படுவதாக கூறினார்.

மாணவர்களுக்கான பொருட்கள்

இதேபோல மாணவர்களுக்கான நோட்டு புத்தகம், பென்சில், அழிப்பான், மேப் ஆகிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுவதாக கூறியுள்ளார்.

மருந்து பொருட்கள்

மேலும், தனிநபர் காப்பீடு, மருத்துவ காப்பீடு, 33 உயிர் காக்கும் மருந்துகள், புற்று நோய், அரிய வகை நோய் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.