ஜிஎஸ்டி குறைப்பு… 40 இஞ்ச் டிவி மற்றும் 1.5 டன் ஏசியின் விலை எவ்வளவு குறையும்?
GST Price Drop : இந்தியாவில் ஜிஎஸ்டியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் வரும் செப்டம்பர் 22, 2025 அன்று நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. குறிப்பாக டிவி மற்றும் ஏசி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் பொதுவாக பண்டிகை காலங்களில் மட்டுமே மக்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வழக்கமாக வைத்திருக்கின்றனர். குறிப்பாக விற்பனையாளர்கள் பண்டிகை காலங்களில் அதிக தள்ளுபடி விற்பனையை அறிவிப்பது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மத்திய அரசு மக்களுக்கு பெரிய சலுகையை அறிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி (GST) கவுன்சில் மீட்டிங்கில் எடுத்த புதிய முடிவின் அடிப்படையில், இதுவரை இருந்த ஜிஎஸ்டி வரி விகிதம் 28 சதவிகிதம் மற்றும் 12 சதவிகிதம் ஆகியவை ரத்து செய்யப்பட்டு, இனி 5 சதவிகிதம் மற்றும் 18 சதவிகிதம் என இரண்டு விகிதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வரி விகிதங்கள் செப்டம்பர் 22, 2025 அன்று முதல் நடைமுறைக்கு நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து தீபாவளி பண்டிகையின் போது பொருட்கள் வாங்குபவர்கள், குறைந்த விலையில் பொருட்கள் வாங்க முடியும். இதன் மூலம் ஏசி, டிவி, கார்கள், பைக், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : குறையும் கார்களின் விலை… கார் லோனுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் வங்கிகள் – எது சிறந்தது?




இதுவரை 32 அங்குலம் மற்றும் அதற்கும் மேற்பட்ட டிவிகளுக்கும், மற்றும் ஏசிக்களுக்கும் 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்போது புதிய மாற்றத்தால் இவை 18 சதவிகிதம் வரி விகிதத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் ஏசி மற்றும் 32 அங்குல டிவியின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை எப்படி குறையும்?
தற்போது அமேசானில் வோல்டாஸ் 1.5 டன் 5 ஸ்டார் இன்வெர்டர் ஸ்பிலிட் ஏசியின் அடிப்படை விலை ரூ.32, 805. அதனுடன் 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரியை சேர்த்து ரூ.41,990க்கு ஆக விற்கப்பட்டு வந்தது. தற்போது புதிய 18 சதவிகிதம் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தால், வரி தொகை ரூ.5,904 ஆக குறையும். இதனால் இறுதி விலை ரூ.38, 709 என நிர்ணயிக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,281 வரை சேமிக்கப்படும் வாய்ப்பு கிடைக்கும்.
அதே போல ஃபிளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்படும். 40 அங்குல ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியின் அடிப்படை விலை ரூ.28,117. அதற்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி சேர்த்து கூடுதலாக ரூ.7,872 சேர்த்து 35,990க்கு விற்கப்பட்டு வந்தது. இதனையடுத்து 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்தால் விலையில் ரூ.5,061 குறையும். இதனால் மொத்த விலை ரூ.33,178 ஆக இருக்கும். மேலும் வாடிக்கையாளர்கள் ரூ.2,81 வரை நேரடியாக சேமிக்கலாம்.
இதையும் படிக்க : ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் வரும் மாற்றம்.. தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா?
நடுத்தரவர்க்கத்தினருக்கு கிடைக்கும் நன்மைகள்
ஜிஎஸ்டி வரி குறைப்பு நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு மிகப்பெரிய நன்மையாக இருக்கும். ஏற்கனவே அமேசான, ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் பண்டிகை கால சலுகைளை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது ஜிஎஸ்டி வரி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதால் பொருட்களின் விலை இரண்டு மடங்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களின் நிதி சுமை குறையும். குறிப்பாக மக்கள் தீபாவளியை முன்னிட்டு தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியும்.