AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜிஎஸ்டி குறைப்பு – எந்ததெந்த மாடல் கார்களின் விலை குறையும்? முழு விவரம்

GST Impact on Cars: இந்தியாவில் அனைத்து விதமான பொருட்களும் 18% மற்றும் 5% என இரண்டு வகைகளின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன. சிறிய ரக கார்கள் 18 சதவிகித ஜிஎஸ்டி விகிதத்தின் கீழ் வரவிருக்கிறது. எந்த மாடல் கார்களின் விலை குறையும் என பார்க்கலாம்.

ஜிஎஸ்டி குறைப்பு – எந்ததெந்த மாடல் கார்களின் விலை குறையும்? முழு விவரம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 05 Sep 2025 15:01 PM IST

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 3, 2025 அன்று நடைபெற்றது. இதில் தற்போது நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி வரிவிகிதங்களை மாற்றி 18% மற்றும் 5% என இரண்டு பிரிவுகளில் வரி விதிக்கப்படும் நடைமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இதனால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிரடியாக குறையவுள்ளது. குறிப்பாக கார்கள் என்பது நடுத்தர வர்க்கத்தினரின் கனவு. இந்த நிலையில் சிறிய கார்கள் 18 சதவிகித வரம்புக்குள் கொண்டுவரப்படவுள்ளது. அதன் படி இந்த கட்டுரையில் எந்தெந்த மாடல் கார்களின் விலை குறையும் என பார்க்கலாம்.

சிறிய கார்களின் விலை குறைய வாய்ப்பு

முன்னர் 28 சதவிகிதம் ஜிஎஸ்டி மற்றும் 1 சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் காம்பன்சேஷன் செய் விதிக்கப்பட்ட சிறிய கார்கள் இனி 18 சதவிகிதம் என்ற பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1,200சிசிக்கு குறைவாக உள்ள பெட்ரோல், எல்பிஜி, சிஎன்ஜி கார்கள், மற்றும் 1,500 சிசிகள் குறைவான டீசல் கார்கள் ஆகியவற்றின் விலை அதிரடியாக குறையவுள்ளது.

இதையும் படிக்க : டூத் பேஸ்ட் முதல் கார் வரை.. அதிரடியாக குறைந்த ஜிஎஸ்டி.. விலையும் குறையும்!

விலை குறையும் கார்களின் பட்டியல்

ஹாட்ச்பேக்

  • மாருதி சுசூகி ஸ்விஃப்ட்
  • மாருதி சுசூகி பாலினோ
  • மாருதி சுசூகி வேகன் ஆர்
  • மாருதி சுசூகி இக்னிஸ்
  • ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்
  • ஹூண்டாய் ஐ20
  • டாடா டியோகோ
  • டாடா ஆல்ட்ரோஸ்
  • ரெக்னால்ட் க்விட்
  • சிட்ரோயன் சி3

ஆகிய கார்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காம்பாக்ட் செடான்

  • மாருதி சுசூகி டிசையர்
  • ஹூண்டாய் ஆரா
  • டாடா டிகோர்

காம்பாக்ட் எஸ்யூவி

  • மாருதி சுசூகி ஃபிராங்க்ஸ்
  • டாடா நிக்சானின் பெட்ரோல் மாடல்கள்
  • ஹூண்டாய் வென்யூ
  • கியா சோனெட்டின் பெட்ரோல் மாடல்கள்
  • கியா சோனெட் பெட்ரோல் மாடல்கள்
  • மகிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ பெட்ரோல் மாடல்கள்
  • டாடா பஞ்ச்
  • ஹூண்டாய் எக்ஸ்டர்

இது போக 350சிசிக்கு குறைவாக உள்ள பைக்குகளுக்கு ஜிஎஸ்டி விகிதம் 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பால் முதல் புற்றுநோய் மருத்து வரை.. இந்த பொருட்களுக்கு இனி ஜிஎஸ்டி இல்லை.. பட்டியல் இதோ!

விலை அதிகரிக்கும் வாகனங்கள்

விலையுயர்ந்த கார்களை பொறுத்தவரை 1,500சிசிக்கு மேற்பட்ட எஞ்சின் திறன் அல்லது 4,000எம்எம் நீளத்துக்கு அதிகமான வாகனங்கள் 40 சதவிகித ஜிஎஸ்டி விகிதத்துக்குள் வரவுள்ளது. குறிப்பாக எஸ்யூவி, எம்யூவி, எக்ஸ்யூவி போன்ற வகை கார்கள் அனைத்துக்கும் அதிக வரி விதிக்க்கப்படவுள்ளது.

விலை உயரக்கூடிய கார்கள்

  • மகிந்திரா ஸ்கார்பியோ
  • மகிந்திரா எக்ஸ்யூவி 700
  • மகிந்திரா தார்
  • ஹூண்டாய் கிரெட்டா
  • கியா செல்டோஸ்
  • டாடா ஹெரியர்
  • டாடா சஃபாரி
  • மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா
  • டொயோட்டா ஃபார்ச்சூனர்
  • டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா
  • ஸ்கோடா சுபர்ப்

இதுபோக ஆடி பிஎம்டபுள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், லாண்ட் ரோவர் போன்ற அனைத்து விலையுயர்ந்த கார்களுக்கு 40 சதவிகிதம் ரஜிஎஸ்டி வரி விதிக்கப்படவுள்ளது.

Follow Us