Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜிமெயிலில் இருந்து ஜோஹோ மெயிலுக்கு மாறுவது எப்படி? – வழிமுறைகள் இதோ!

Gmail to Zoho mail: ஜிமெயிலுக்கு மாற்றாக வளர்ந்து வரும் ஜோஹோ மெயில், இந்திய மென்பொருள் துறையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தனியுரிமை மற்றும் விளம்பரமில்லாத அனுபவத்தை விரும்புவோருக்கு இது சிறந்த தீர்வாகும். அமித் ஷா போன்ற தலைவர்கள் இதனைப் பயன்படுத்த பரிந்துரைப்பது மேலும் வலுகூட்டியுள்ளது.

ஜிமெயிலில் இருந்து ஜோஹோ மெயிலுக்கு மாறுவது எப்படி? – வழிமுறைகள் இதோ!
Zoho மெயில் - ஜிமெயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 09 Oct 2025 13:23 PM IST

இன்றைய காலக்கட்டத்தின் மின்னஞ்சல் என்பது அனைவரது தேவையாகவும் உள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் தொடங்கி பல தரப்பட்ட தகவல்களை, தரவுகளை சேகரிக்கும் ஒரு இடமாக மின்னஞ்சல் பார்க்கப்படுகிறது. என்னதான் விதவிதமான பிரவுசர்கள் வந்தாலும் பெரும்பாலும் நாம் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவையை தான் உலகளவில் பயன்படுத்தி வருகிறோம். இப்படியான நிலையில் பிரபல தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்புவின் ஜோஹோ நிறுவனம் இந்திய மென்பொருள் துறையில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே ஜோஹோ நிறுவனத்தின் செயலியான அரட்டை, வாட்ஸ்அப்பிற்கு வலுவான மாற்றாக அமைந்துள்ளது. இப்படியான நிலையில் பல பயனர்கள் ஜிமெயிலில் இருந்து ஜோஹோ மெயிலுக்கு மாற்றம் கண்டு வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஜோஹோ மெயிலுக்கு மாறியிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த உள்நாட்டு மின்னஞ்சல் சேவைக்கு மத்திய அரசு துறைகளையும் மாற வேண்டும் என தெரிவித்திருப்பது ஜோஹோ மெயிலுக்கு ஒரு விளம்பர உந்துதலை அளித்துள்ளது. குறிப்பாக தனியுரிமை சார்ந்த மற்றும் விளம்பரமில்லாத மின்னஞ்சல் அனுபவத்தைத் தேடும் பயனர்களிடையே, ஜிமெயிலுக்கு விருப்பமான மாற்றாக ஜோஹோ மெயில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதனை நாம் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிக் காணலாம்.

Also Read:   ஸ்டோரேஜ் சிக்கலை சரிசெய்ய ஜிமெயிலில் வந்தாச்சு Manage Subscriptions அம்சம்.. பயன்படுத்துவது எப்படி? 

ஜோஹோ மெயிலுக்கான வழிகாட்டுதல் முறைகள் 

  1. இந்த மின்னஞ்சல் சேவை தனிப்பட்ட பயனர்கள் மற்றும் நிறுவனங்கள் இரண்டிற்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது, வலைத்தளம், மொபைல் மற்றும் IMAP/SMTP அணுகல், ஒருங்கிணைந்த தொடர்புகள், காலண்டர் மற்றும்  Zoho Workplace உள்ளிட்ட ஆகியவற்றை வழங்குகிறது.
  2. ஜோஹோ மெயிலுக்குச் சென்று நீங்கள் தனிப்பயனர் அல்லதுஒரு வணிக அல்லது பணியிடத் திட்ட ஆப்ஷனை தேர்வுசெய்யவும், இதன் மூலம் உங்கள் பெயருடனான ஜோஹோ மெயில் ஐடி சேர்த்து சரிபார்க்கவும்.
  3. இரண்டு ஆப்ஷன்களிலும் நீங்கள் மொபைல் எண்ணை உள்ளீட வேண்டும்.
  4. இப்போது நீங்கள் உங்கள் ஜிமெயிலுக்குள் சென்று செட்டிங்க்ஸ் – ஆல் செட்டிங்ஸ் உள்ளே நுழையவும். அங்கு மேலே வலது பக்கமாக Forwarding and POP/IMAP enable IMAP என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் Add a Forwarding Address என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் நீங்கள் புதிதாக ஓபன் செய்த ஜோஹோ நிறுவன மெயில் ஐடியை கொடுக்க வேண்டும். அதன் கீழே இருக்கும் Enable POP for all mail என்பதை தேர்வு செய்யவும்.
  5. தொடர்ந்து Zoho மெயில் செட்டிங் ஆப்ஷனுக்கு சென்று, அங்கிருக்கும் Import/Export பிரிவைத் திறக்கவும். உங்கள் மின்னஞ்சல்கள், கோப்புறைகள் மற்றும் தொடர்புகளை Gmail-லிருந்து Zoho மெயிலுக்கு இறக்குமதி செய்ய Migration Wizard கிளிக் செய்யவும். இப்போது உங்கள் புதிய மின்னஞ்சல் முகவரியைப் பற்றி உங்கள் சார்ந்தவர்களுக்கு தெரிவித்து, வங்கி, சந்தாக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற அனைத்து சேவைகளிலும் அதனை அப்டேட் செய்யவும்.

Also Read:   ஜிமெயிலில் உருவெடுத்த புதிய வகை மோசடி.. பயனர்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை!