தீபாவளியை முன்னிட்டு பட்ஜெட் விலை அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எம் 17.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
Samsung Galaxy M17 Launched | சாம்சங் நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது சாம்சங் கேகல்ஸி எம் 17 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் (Samsung) தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஆன சாம்சங் கேலக்ஸி எம் 17 ஸ்மார்ட்போனை (Samsung Galaxy M17 Smartphone) அறிமுகம் செய்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்ஜெட் விலை இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம் 17 ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனம் நேற்று (அக்டோபர் 10, 2025) தனது புதிய மாடஸ் ஸ்மார்ட்போன் ஆன சாம்சங் கேலக்ஸி எம்7 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.




- இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.
- இது கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன் உடன் வருகிறது.
- இது 5 என்எம் Exynos 1330 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இது 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது.
- இதற்கு 6 வருட ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும்.
இதையும் படிங்க : வாடஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? அப்போ உடனடியாக இதை டிரை பண்ணுங்க!
சாம்சங் கேலக்ஸி எம் 17 – விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்
Samsung Galaxy M17 5G has been launched in India at a starting price of Rs 12,499.
Key specs:
– 50MP primary sensor with OIS
– 6.7-inch Super AMOLED display
– Exynos 1330
– OneUI 7
– 5,000mAh battery pic.twitter.com/3p7IEY64TB— 91mobiles (@91mobiles) October 10, 2025
4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்மார்ட்போன்
4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம் 17 ஸ்மார்ட்போன் ரூ.16,499-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசான் இந்தியாவில் கிடைக்கும் சலுகை மூலம் இதனை வாங்கினால் வெறும் ரூ.12,499-க்கே பெற்றுக்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போன் Moonlight Silver, Sapphire Black ஆகிய இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஜிமெயிலில் இருந்து ஜோஹோ மெயிலுக்கு மாறுவது எப்படி? – வழிமுறைகள் இதோ!
இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 13, 2025 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.