நள்ளிரவில் துவங்கும் ஃபிளிப்கார்ட் தீபாவளி சேல் – ஐபோன் 16 முதல் ரியல்மி 15 புரோ வரை – அதிரடி தள்ளுபடிகள்
Flipkart Diwali Sale 2025 : ஃபிளிப்கார்ட்டில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்திருக்கிறது. இந்த விற்பனை அக்டோபர் 11, 2025 அன்று நள்ளிரவு முதல் துவங்குகிறது. குறிப்பாக இதில் ஐபோன், ரியல்மி போன்ற பிராண்ட்களுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் வருகிற அக்டோபர் 20, 2025 அன்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் மக்கள் புத்தாடை மற்றும் பட்டாசுகள் வாங்க கடைகளில் குவிந்து வருகின்றனர். மேலும் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளம் ஃப்ளிப்கார்ட் (Flipkart) தனது மிகப்பெரிய பிக்பேங்க் தீபாவளி சேல் 2025ஐ இ அக்டோபர் 10, 2025 அன்று நள்ளிரவு முதல் துவக்குகிறது. இந்த மாபெரும் தள்ளுபடி விற்பனையில் ஆப்பிள், சாம்சங், ரியல்மி, விவோ, நத்திங் போன்ற முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் புதிய மாடல்கள் மிகப்பெரிய தள்ளுபடிகளுடன் விற்பனை செய்யப்படவிருக்கின்றன. ஃபிளிப்கார்ட் பிளாக் மற்றும் பிளஸ் உறுப்பினர்களுக்கு இந்த தள்ளுபடி விற்பனை அக்டோபர் 10, 2025 முதல் துவங்குகிறது. அத குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் சலுகைகள்
ஆப்பிள் ஐபோன் 16
பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 (iPhone 16) இந்த தீபாவளி சேலில் வரலாற்றிலேயே குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. ஐபோன் 16 போனை ரூ.54,999க்கு வாங்கலாம். அதாவது, ரூ.25,000 வரை தள்ளுபடியில் விற்கப்படுகிரது. இந்த ஐபோன் 16 மேம்பட்ட கேமரா, சிப்செட் மற்றும் நீண்ட பேட்டரி ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : கடைசி நாளில் ஆஃபர்களை வாரி வழங்கும் ஃபிளிப்கார்ட்… ஸ்மார்ட் டிவி முதல் லேப்டாப் வரை… அதிரடி தள்ளுபடியில் விற்பனை




நத்திங் போன் (Nothing Phone (3a)
இந்த ஆண்டில் நத்திங் நிறுவனம் அறிமுகப்படுத்திய போன் (3ஏ) தற்போது மாபெரும் தள்ளுபடியில் கிடைக்கிறது. இதன் அதிகபட்ச விலை ரூ. 24,999 என அறிவிக்கப்பட்ட நிலையில் தீபாவளி சேலில் ரூ.4,000 தள்ளுபடியுடன் ரூ.20,999க்கு வாங்கலாம். மேலும் 50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, ஸ்டைலிஷ் டிசைன் ஆகியை இதன் சிறப்பம்சங்களாக கூறப்படுகிறது. மேலும் 7000mAh பேட்டரி மற்றும் ஸ்பீட் சார்ஜிங் வசதி ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கிறது.
ரியல்மி 15 புரோ (Realme 15 Pro)
மக்களிடையே பிரபலமாக இருக்கும் ரியல்மி 15 புரோ மாடல் தற்போது வெறும் ரூ.26,999க்கு கிடைக்கும். மேலும் சில வங்களின் கிரெடிட் கார்டுகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களுக்கு கூடுதல் சேமிப்பு பெறலாம். மேலும் இதில் 12ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ், 50எம்பி டூயல் கேமரா, 6.8 இஞ்ச் AMOLED டிஸ்பிளே, Qualcomm Snapdragon 7 Gen 4 Processor ஆகியவை உள்ளன.
சாம்சங் கேலக்ஸி எஃப்36 (Samsung Galaxy F36)
சாம்சங் கேலக்ஸி எஃப்36 மாடல் தற்போது சிறந்த விலையில் கிடைக்கிறது. மேலும் 8ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த மாடலை வெறும் ரூ.13,999க்கு வாங்கலாம். மேலும் சில குறிப்பிட்ட வங்கி கிரெடிட் கார்டு மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் மூலம் கூடுதல் தள்ளுபடிகள் கிடைக்கும்.
இதையும் படிக்க : அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்.. அசத்தல் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் லேப்டாப்கள்!
விவோ டி4ஆர் 5ஜி (விவோ டி4ஆர் 5ஜி)
விவோ டி4ஆர் 5ஜி மாடல் வெறும் ரூ.17,499க்கு கிடைக்கிறது. இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 பிராசசர், 12ஜிபி ராம் மற்றும் 5700mhAh பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் சில பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடியும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்படுகிறது.