Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஏசி வாங்கப்போறீங்களா? பிரபல பிராண்டுகளுக்கு ஃபிளிப்கார்ட் வழங்கும் அதிரடி தள்ளுபடி

Flipkart's Big AC Discounts : ஃபிளிப்கார்ட் நிறுவனம் சிறந்த ஏசி பிராண்டுகளுக்கு 50 சதவகிதம் வரை தள்ளுபடி வழங்குகின்றன. முன்னணி பிராண்டுகளின் ஏசிக்கள் ரூ. 27,49 முதல் விற்பனை செய்யப்படுகின்றன. கோடை காலத்தில் குறைந்த விலையில் ஏசி வாங்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது.

ஏசி வாங்கப்போறீங்களா? பிரபல பிராண்டுகளுக்கு ஃபிளிப்கார்ட் வழங்கும் அதிரடி தள்ளுபடி
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 21 May 2025 15:59 PM

இந்த கடும் கோடையில் (Summer) நாம் வீட்டுக்கு ஒரு ஏசி (AC) வாங்கலாம் என பலரும் திட்டமிட்டிருப்போம். ஆனால் அதன் விலை, நம் மாத பட்ஜெட்டிற்குள் அடங்காததால் அந்த எண்ணத்தை விரைவிலேயே மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும். ஏசி என்பது தற்போது அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகி விட்டது. இந்த நிலையில் ஃப்ளிப்கார்ட் தற்போது பிரபல பிராண்டுகளான TCL, Lloyd, Onida, Acer போன்ற பிராண்டுகளில் 1.5 டன் ஸ்ப்ளிட் ஏ.சி மாடல்களில் 50% வரை தள்ளுபடி வழங்கி வருகிறது. குறிப்பாக ரூ.27,490 என்ற குறைவான விலையில் இருந்து அதன் விற்பனை துவங்கியுள்ளது. மேலும் குறைந்த விலையில்  இந்த ஏ.சி-க்கள் கிடைப்பதால், இந்தியாவின் கடும் வெயிலுக்கு சிறந்த தீர்வாக அமைகின்றன.

TCL 1.5 டன் ஸ்ப்ளிட் ஏசி

டிசிஎல் நிறுவத்தின் 1.5 டன் ஸ்ப்ளிட் ஏசி ஃபிளிப்கார்டில் ரூ.30,000க்கும் குறைவாக சலுகை விலையில் கிடைக்கிறது. இதில் 3 ஸ்டார் ரேட்டிங், 5-இன்-1 கம்பர்டிபிள் கூலிங் தொழில்நுட்பம், சிறந்த ஏர்ஃப்ளோ, இன்பில்ட் ஏர் பியூரிஃபையர் என பல அம்சங்கள் உள்ளன. வீட்டிற்குள் தூய்மையான காற்றை வழங்குவதுடன் குளிராகவும் வைத்திருக்கிறது.

Onida 1.5 டன் ஸ்ப்ளிட் ஏ.சி

இந்தியாவில் நம்பிக்கைக்குரிய பிராண்டாக கருதப்படும் Onida, தனது 1.5 டன் ஸ்ப்ளிட் ஏ.சி-யை ரூ.27,490 என்ற மிகக் குறைந்த விலையில் வழங்குகிறது. இதில் 3 ஸ்டார் பவர் ரேட்டிங், 5-in-1 கூலிங், மற்றும் 55 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் செயல்படும் திறன் ஆகியவை இதன் சிறப்பம்சமாகும். கோடை வெயிலை வென்றிட ஒரு சிறப்பான தேர்வாக இந்த மாடல் அமைந்துள்ளது.

Lloyd 1.5 டன் ஸ்ப்ளிட் ஏ.சி

ஃபிளிப்கார்ட்டில் Lloyd நிறுவத்தின் ஏசி ரூ.28,990-க்கு துவங்குகிறது, இதில் 48% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது 3 ஸ்டார் ரேட்டிங், மற்றும் 48 டிகிரிக்கும் மேலான வெப்ப நிலையிலும் சிறப்பாக செயல்படும் திறன் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள்.  Lloyd பிராண்டை பொறுத்தவரை ஏசி பிராண்டுகளில் இந்திய சந்தைகளில் நன்மதிப்பை பெற்றிருக்கிறது.

Acer 1.5 டன் ஸ்ப்ளிட் ஏ.சி

டெக் உலகின் பிரபலமான Acer நிறுவனமும் தனது 1.5 டன் ஸ்ப்ளிட் ஏ.சி மாடலை ரூ.29,99க்கு வழங்கி வருகிறது. இதில் 3 ஸ்டார் ரேட்டிங், 5050W கூலிங் திறன் ஆகிய சிறப்பம்சங்களுடன் கிடைக்கின்றன. மேலும் இதன் விலையில் 50% தள்ளுபடியுடன் ஃபிளிப்கார்டில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பட்ஜெட் விலையில் நல்ல செயல்திறன் மிக்க ஏசி பிராண்டுகளை தேர்ந்தெடுப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் வெயில் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், ஃப்ளிப்கார்ட் வழங்கும் இந்த சலுகைகள் உங்கள் வீட்டிற்கு சிறந்த செயல்திறன் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய  ஏசியை குறைந்த விலையில் வாங்க இது நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் மற்றும் குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு சிறந்த தள்ளுபடிகள் கிடைக்கின்றன.

அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - இயக்குநர் யார் தெரியுமா?
அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - இயக்குநர் யார் தெரியுமா?...
புயல் காரணமாக நடுவானில் விமானம் சேதம் - பயத்தில் அலறிய பயணிகள்
புயல் காரணமாக நடுவானில் விமானம் சேதம் - பயத்தில் அலறிய பயணிகள்...
டெல்லியில் கனமழை! மின் தடை.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
டெல்லியில் கனமழை! மின் தடை.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!...
ஏஸ் முதல் நரிவேட்ட வரை... இந்த வார தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் இதோ!
ஏஸ் முதல் நரிவேட்ட வரை... இந்த வார தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் இதோ!...
ரயிலில் இருந்து எறியப்பட்ட சூட்கேஸ்.. திறந்தால் இளம் பெண் உடல்..!
ரயிலில் இருந்து எறியப்பட்ட சூட்கேஸ்.. திறந்தால் இளம் பெண் உடல்..!...
ஆரோக்கியத்துக்கு சிறந்தது க்ரீன் டீயா? பிளாக் டீயா?
ஆரோக்கியத்துக்கு சிறந்தது க்ரீன் டீயா? பிளாக் டீயா?...
20 வருசமா ஹீரோயினா இருப்பது பெருசு - த்ரிஷாவை புகழ்ந்த விஜய்
20 வருசமா ஹீரோயினா இருப்பது பெருசு - த்ரிஷாவை புகழ்ந்த விஜய்...
சாட்ஜிபிடி மூலம் Black & White புகைப்படத்தை Colour-ஆக மாற்றலாம்!
சாட்ஜிபிடி மூலம் Black & White புகைப்படத்தை Colour-ஆக மாற்றலாம்!...
பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது பண மோசடி புகார்!
பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது பண மோசடி புகார்!...
விஜய் படமா? அஜித் படமா? நடிகை சமந்தா சொன்ன ஷாக் பதில்!
விஜய் படமா? அஜித் படமா? நடிகை சமந்தா சொன்ன ஷாக் பதில்!...
SwaRail Vs IRCTC : இந்தியாவின் புதிய சூப்பர் ஆப் - என்ன ஸ்பஷல்?
SwaRail Vs IRCTC : இந்தியாவின் புதிய சூப்பர் ஆப் - என்ன ஸ்பஷல்?...