அமேசான் vs ஃப்ளிப்கார்ட்: எந்த தளத்தில் ஸ்மார்ட் டிவி விலை குறைவு? தீபாவளிக்கு எது சரியான சாய்ஸ்?
Flipkart vs Amazon : தீபாவளியை முன்னிட்டு அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் சிறந்த தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளன. இந்த நிலையில் குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு எது சிறந்த தளம் என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தீபாவளி (Diwali) பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவின் இரு முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் (Amazon) மற்றும் ஃப்ளிப்கார்ட் (Flipkart) தளங்களில் Amazon Great Indian Festival 2025 மற்றும் Flipkart Big Billion Days 2025 என இரண்டு பெரிய விற்பனையை தொடங்கியுள்ளன. குறிப்பாக தீபாவளிக்கு புதிதாக எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்க திட்டமிடுபவர்களுக்கு இது மிகவும் சரியான தருணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரு தளங்களிலும் ஸ்மார்ட் டிவி பிரிவில் பெரிய தள்ளுபடிகள், வங்கி சலுகைகள், எக்சேஞ்ச் ஆஃபர்கள் ஆகியவற்றை வழங்கி வருகின்றன. இதனால் எந்த தளத்தில் விலை மிகக் குறைவாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
எல்ஜி ஸ்மார்ட் டிவிக்களில் 50% வரை தள்ளுபடி
அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் தளங்களில் எல்ஜி நிறுவனத்தின் OLED, QNED, webOS மாடல் டிவிக்கள் மீது மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
- குறிப்பாக எல்ஜி 65 இஞ்ச் QNED 8AA சீரிஸ் 4கே ஸ்மார்ட் டிவி ரூ. 1.65 லட்சத்தில் இருந்து ரூ.88,990க்கு கிடைக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு தளங்களும் 46 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கின்றன.
- மேலும், எல்ஜி 32 இஞ்ச் LR570 சீரிஸ் ஸ்மார்ட் டிவி ரூ.21,240ல் இருந்து ரூ.13, 489க்கு கிடைக்கிறது. கிட்டத்தட்ட 36 சதவிகிதம் தள்ளுபடியில் கிடைக்கிறது.
அமேசானில் OLED மாடல்கள் அதிக சலுகையுடன் கிடைக்க, ஃபிளிப்கார்ட்டில் எல்இடி மற்ற்றும் webOS டிவிக்கள் குறைந்த விலையில் கிடைக்கும். அதனால் நம் விருப்பத்தை பொறுத்தை தேர்வு செய்யலாம்.




இதையும் படிக்க : கடைசி நாளில் ஆஃபர்களை வாரி வழங்கும் ஃபிளிப்கார்ட்… ஸ்மார்ட் டிவி முதல் லேப்டாப் வரை… அதிரடி தள்ளுபடியில் விற்பனை
சாம்சங் டிவிக்களுக்கு 44% வரை தள்ளுபடி
சாம்சங் கிரிஸ்டல் 4K, QLED, Vision AI டிவிகள் இரு தளங்களிலும் அதிக தள்ளுபடியில் கிடைக்கின்றன.
- சாம்சங் 75 இஞ்ச் Crystal 4K Ultra HD ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.1.40 லட்சத்தில் இருந்து ரூ.77,990 ஆக குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 44 சதவிகிதம் தள்ளுபடியில் கிடைக்கிறது.
- சாம்சங் 55 இஞ்ச் QLED Vision AI 4K டிவி ரூ.75,500-ல் இருந்து ரூ.44,490 என்ற குறைவான விலையில் கிடைக்கிறது. கிட்டத்தட்ட 41 சதவிகிதம் தள்ளுபடியில் கிடைக்கின்றன.
- சாம்சங் 43 இஞ்ச் 4K Vista Pro டிவியானது ரூ.43,200-ல் இருந்து ரூ.26,400 ஆக குறைந்து 39 சதவிகிதம் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.
அமேசானில் பெரிய சைஸ் டிவிக்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அதே நேரம் ஃபிளிப்கார்ட்டில் சிறிய மாடல்களுக்கு சிறந்த சலுகைகள் கிடைக்கின்றன.
Sony Bravia டிவிகளுக்கு 55% வரை தள்ளுபடி
சோனி பிரேவியா 4K Google TV Series டிவிகள் தற்போது இரு தளங்களிலும் சலுகை விலையில் கிடைக்கின்றன.
- சோனி 75 இஞ்ச் BRAVIA 2M2 Series ரூ.2.40 லட்சத்தில் இருந்து 55 சதவிகித தள்ளுபடியுடன் ரூ.1.08 லட்சம் விலையில் விற்பனை செய்யல்படுகிறது.
- சோனி 65 இஞ்ச் Bravia 2M2 Google டிவி ரூ.1.40 லட்சத்தில் இருந்து 44 சதவிகிதம் தள்ளுபடியுடன் ரூ.1.08 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- சோனி 55 இஞ்ச் Bravia 2M2 Google TV ரூ.99.900ல் இருந்து 44 சதவிகித தள்ளுபடியுடன் ரூ.55,900 விற்பனை செய்யப்படுகின்றன.
இரு தளங்களிலும் Google TV, Dolby Vision, HDMI 2.1, 120Hz போன்ற தொழில்நுட்ப வசதிகள் ஒரே விலையில் கிடைக்கின்றன, ஆனால் அமேசானில் சவுண்ட்பார் இணைப்பு சிறந்ததாக கூறப்படுகிறது.
ஜியோமி டிவிகளுக்கு 60% வரை விலை குறைவு
ஜியோமி மற்றும் ரெட்மி டிவிக்கள் தற்போது அமேசான், ஃப்ளிப்கார்ட் இரண்டிலும் 60% வரை தள்ளுபடியில் கிடைக்கின்றன.
-
ஜியோமி 75 இஞ்ச் Q1 4K QLED TV ரூ.1.80 லட்சத்தில் இருந்து 60 சதவிகித தள்ளுபடியுடன் ரூ.71,990 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
-
ஜியோமி 32 இஞ்ச் Smart Google TV ரூ.24,999ல் இருந்து 54 சதவிகிதத்துடன் ரூ.11,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- ஜியோமி 55 இஞ்ச் FX Pro 4K QLED Fire TV ரூ.62,999-ல் இருந்து 48 சதவிகித தள்ளுபடியுடன் ரூ.32,999க்கு கிடைக்கிறது.
அமேசானில் Fire TV Edition மாடல்கள் அதிக தள்ளுபடியில் கிடைக்கின்றன. அதே நேரம் ஃப்ளிப்கார்டில் Google TV மாடல்கள் விலை குறைவாக உள்ளன.
இதையும் படிக்க : அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்.. அசத்தல் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் லேப்டாப்கள்!
மேலும் எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை கூடுதல் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. மேலும் பழைய டிவிக்களை எக்ஸ்சேஞ்ச் முறையில் கொடுத்து புதிய டிவிக்கள் வாங்கும்போது ரூ.4,000 முதல் ரூ.8,000 வரை தள்ளுபடிகள் கிடைக்கும். சில பிராண்டுகளில் கட்டணமில்லா மாதத் தவணை மற்றும் 1 ஆண்டு வரை கூடுதல் உத்தரவாதம் வழங்கப்படும்.
எது சிறந்தது ?
- 55 இஞ்ச் மற்றும் அதற்கு மேல் உள்ள டிவிக்களுக்கு அமேசான் சிறந்த தளமாக பார்க்கப்படுகிறது.
- அதே நேரம், 32 இஞ்ச் முதல் 43 இஞ்ச் வரையிலான சிறிய ரக டிவிக்களுக்கு ஃபிளிப்கார்ட் சிறந்ததாக பார்க்கப்படுகிறது.
- மேலும் வங்கி சலுகை, எக்ஸ்சேஞ்ச் விலை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற சிறந்த டிவிக்களை வாங்க முடியும்.