வாட்ஸ்அப்பை போலவே திரட்ஸிலும் வந்தது Community.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
Community Feature Introduced in Threads Too | மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் உள்ளதை போலவே தற்போது எக்ஸ் செயலியிலும் கம்யூனிட்டி அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தின் சிறப்புகள் என்ன என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

உலக மக்களிடையே மெட்டா (Meta) நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் (Instagram) செயலி மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த நிலையில் தான் மெட்டா நிறுவனம் திரட்ஸ் (Threads) செயலியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. இந்த செயலி எக்ஸ் செயலியை போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்ஸ்டாகிராம் செயலி, பொதுமக்கள் மத்தியில் எவ்வளவு பிரபலமாக உள்ளதோ அதேபோல, திரட்ஸ் செயலியும் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த நிலையில், திரட்ஸ் செயலியில் ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது என்ன அம்சம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
லட்சக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் திரட்ஸ்
மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலிக்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்கள் உள்ளனர். இந்த நிலையில் தான் திரட்ஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலி எக்ஸ் செயலியை போலவே சில அம்சங்களை கொண்டு இருக்கும். எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்க், அந்த செயலியில் கட்டணத்தை அறிமுகம் செய்த நிலையில், பெரும்பாலான பயனர்கள் திரட்ஸ் செயலிக்கு மாறினர். இவ்வாறு பலரும் திரட்ஸ் செயலியை பயன்படுத்தும் நிலையில் அதில் தற்போது வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் உள்ளதை போலவே கம்யூனிட்டி (Community) அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இனி விமானத்தில் பயணம் செய்யும்போது பவர் பேங்க் பயன்படுத்தக்கூடாது.. எமிரேட்ஸ் அதிரடி உத்தரவு!




திரட்ஸ் செயலியில் அறிமுகமான கம்யூனிட்டி அம்சம்
திரட்ஸ் செயலியை லட்சக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் நிலையில், அதில் ஒரு அட்டகாசமான கம்யூனிட்டி அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் உள்ள கம்யூனிட்டி அம்சத்தை போன்றதுதான் இது. அதாவது இந்த அம்சத்தை பயன்படுத்தி பயனர்கள் தங்களுக்கு பொருத்தமான கம்யூனிட்டிகளை தேர்வு செய்து பயன் பெறலாம். பயனர்கள் தங்களுக்கு தொடர்புடைய கம்யூனிட்டிகளை சர்ச் செய்து அவற்றில் இணையலாம் என்று மெட்டா தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : வாட்ஸ்அப்பை பின்னுக்கு தள்ளிய அரட்டை.. App Store-ல் முதல் இடம் பிடித்து சாதனை!
தற்போதைய நிலவரத்தின் படி திரட்ஸ் செயலியில் புத்தகங்கள், விளையாட்டு உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் சுமார் 100 கம்யூனிட்டிகள் உள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது. திரட்ஸ் பயனர்கள் ஏதேனும் ஒரு கம்யூனிட்டியில் இணைந்தால் மற்ற பயனர்களும் அதனை தெரிந்துக்கொள்ளும் வகையில் அவர்களின் பெயர் மீது லேபிள் ஒன்று தோன்றும் என்றும் மெட்டா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.