உங்கள் பழைய கேஸ் ஸ்டவ்களை மாற்ற இதுதான் சரியான நேரம்.. அசத்தல் தள்ளுபடி வழங்கும் அமேசான்!
Amazon Great Indian Festival Sale | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல நிறுவனங்கள் அசத்தல் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அமேசான் நிறுவனம் தனது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் கேஸ் ஸ்டவ்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்குகிறது.

இந்தியாவில் இன்னும் ஒருசில நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிக சலுகை மற்றும் மிக குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றன. பிளிப்கார்ட் (Flipkart), அமேசான் (Amazon) உள்ளிட்ட இ காமர்ஸ் நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்கள், மின்சாதன் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்திற்கும் அசத்தல் சலுகைகளை வழங்குகின்றன. அந்த வகையில், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் (Amazon Great Indian Festival Sale) கேஸ் ஸ்டவ்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அதனை பயன்படுத்தி உங்கள் பழைய கேஸ் ஸ்டவ்களை புதியதாக மாற்றிக்கொள்ளலாம். இந்த நிலையில், எந்த எந்த கேஸ் ஸ்டவ்களுக்கு எவ்வளவு சலுகை வழங்கப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் – கேஸ் ஸ்டவ்களுக்கு அசத்தல் தள்ளுபடி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் பல முன்னணி பிராண்டுகளின் கேஸ் ஸ்டவ்கள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
பட்டர்ஃபிளை ஸ்மார்ட் பர்னர் கிளாஸ் டாப் கேஸ் ஸ்டவ்
இந்த பட்டர்ஃபிளை ஸ்மார்ட் பர்னர் கிளாஸ் டாப் கேஸ் ஸ்டவ் (Butterfly Smart Burner Glass Top Gas Stove), ரூ.7,995-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் வெறும் ரூ.3,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ப்ரீத்தி ஆல்யா 3 பர்னர் கிளாஸ் டாப் கேஸ் ஸ்டவ்
இந்த ப்ரீத்தி ஆல்யா 3 பர்னர் கிளாஸ் டாப் கேஸ் ஸ்டவ் (Preethi Alya 3 Burner Glass Top Gas Stove), ரூ.8,195-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் வெறும் ரூ.3,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : நள்ளிரவில் துவங்கும் ஃபிளிப்கார்ட் தீபாவளி சேல் – ஐபோன் 16 முதல் ரியல்மி 15 புரோ வரை – அதிரடி தள்ளுபடிகள்
பிரஸ்டீஜ் மேஜிக் பிளஸ் டஃப் அண்ட் கிளாஸ் டாப்
இந்த பிரஸ்டீஜ் மேஜிக் பிளஸ் டஃப் அண்ட் கிளாஸ் டாப் கேஸ் ஸ்டவ் (Prestige Magic Plus Toughened Glass Top Gas Stove) ரூ.7,795-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் வெறும் ரூ.4,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மில்டன் ராயல் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் எல்பிஜி கேஸ் ஸ்டவ்
இந்த மில்டன் ராயல் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் எல்பிஜி கேஸ் ஸ்டவ் (Milton Royal Stainless Steel LPG Gas Stove) ரூ.8,599-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் வெறும் ரூ.3,979-க்கு விற்பனை செய்யப்படுகிறது.