MappIs : கூகுள் மேப் செயலிக்கு போட்டியாக அறிமுகமான Mappls.. அமெரிக்க வேலையை உதறிவிட்டு இந்தியர் செய்த சாதனை!
MappIs India Dominates Google Map | சமீப காலமாக இந்திய செயலிகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் மேப்பை மேப் மை இந்தியா நிறுவனத்தின் MappIs செயலி முந்தியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமீப காலமாகவே இந்தியாவில் உருவாக்கப்படும் செயலிகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்திய நிறுவனங்கள் அவ்வப்போது பல செயலிகளை அறிமுகம் செய்து வந்தாலும், வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் செயலிகளை முந்தியதில்லை. ஆனால், சோஹோ (Zoho) நிறுவனத்தின் அரட்டை (Arattai) செயலி வாட்ஸ்அப்பை முந்தி புதிய சாதனை படைத்துள்ளது. அதனை தொடர்ந்து பல்வேறு இந்திய செயலிகள் பிரபலமாக தொடங்கியுள்ளன. அந்த வகையில், கூகுள் மேப் (Google Map) செயலிக்கு போட்டியாக இந்திய செயலி களமிறங்கியுள்ளது. அது என்ன செயலி, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கூகுள் மேப் செயலிக்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் கூகுள் நிறுவனத்தின் மேப் செயலியை பயன்படுத்தி வந்தனர். தெரியாத இடங்களில் பயணம் செய்யும் மக்களுக்கு இந்த கூகுள் மேப் பெரும் உதவியாக உள்ளது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் இந்த செயலியை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது கூகுள் மேப் செயலிக்கு போட்டியாக Mappls என்ற இந்திய செயலி களமிறங்கியுள்ளது. வாட்ஸ்அப் செயலிக்கு பதிலாக ஏராளமான பொதுமக்கள் அரட்டை செயலியை பயன்படுத்த தொடங்கியதை போலவே தற்போது பொதுமக்கள் கூகுள் மேப் செயலிக்கு பதிலாக இந்த செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப்பில் அறிமுகமாக வரிசை கட்டி நிற்கும் புதிய அம்சங்கள்.. என்ன என்ன தெரியுமா?
MappIs செயலி உருவானது எப்படி?
இந்த Mappls செயலிக்கு பின்னால் மேப் மை இந்தியா (MapmyIndia) நிறுவனம் தான் உள்ளது. இது கூகுள் மேப்புக்கு முன்னதாக தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகும். இந்தியாவுக்கு ஒரு சிறந்த மேப் தேவை என்ற மேப் மை இந்தியா நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகேஷ் வர்மா எடுத்த முடிவின் அடிப்படையில் தான் இந்த செயலி உருவாகியுள்ளது. அமெரிக்காவில் தனது உயர் படிப்பை முடித்த ராகேஷ், அங்கேயே தனது ஆரம்ப கால பணி வாழ்க்கையை தொடங்கியுள்ளார். பின்பு தான் அவர் இந்தியாவுக்கு ஒரு சிறந்த மேப் செயலி தேவை என்பதை உணர்ந்து இந்தியாவுக்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க : கூகுள் குரோமை பின்னுக்கு தள்ளிய சோஹோவின் உலா.. அப்படி என்ன சிறப்பு அம்சம் இருக்கிறது?
அமெரிக்காவில் தனது பணியை உதறிவிட்டு இந்தியா வந்த ராகேஷ் வர்மா மேப் மை இந்தியா நிறுவனத்தை தொடங்கினார். நிறுவனத்தை தொடங்கியது முதலே இந்திய குடிமக்களுக்கு தரமான டிஜிட்டல் மேப் செயலியை வழங்க வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார். அதன் அடிப்படையில் தான் தற்போது MappIs இந்தியா என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளார். இந்த செயலி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.