Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

5ஜி நெட்வொர்க்கால் உங்க போன் பேட்டரிக்கு ஆபத்தா? உண்மை என்ன?

Tech Utility: இந்த நாட்களில், அனைவரும் 5ஜி அதிவேக நெட்வொர்க்கை அனுபவிக்க விரும்புகிறார்கள், ஆனால் அது உங்கள் போனின் பேட்டரியை எவ்வளவு பாதிக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. டெ 5G நெட்வொர்க்குகள் பொதுவாக 4G நெட்வொர்க்குகளை விட அதிக பவரை பயன்படுத்துகின்றன.

5ஜி நெட்வொர்க்கால் உங்க போன் பேட்டரிக்கு ஆபத்தா? உண்மை என்ன?
5ஜி நெட்வொர்க்
Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Oct 2025 17:21 PM IST

இந்தியாவை பொறுத்தவரை நாம் இப்போது 5ஜி (5G) யுகத்தில் இருக்கிறோம். அனைவரும் அதிவேக இண்டர்நெட் வசதிக்காக  5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்கி வருகிறார்கள். ஆனால் 5ஜி நெட்வொர்க்குகள் ஸ்மார்ட்போன் பேட்டரிகளில் என்ன விளைவை ஏற்படுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?  4ஜி-லிருந்து 5ஜிக்கு மாறுவது உங்கள் பேட்டரியை எவ்வாறு பாதிக்கும் என்பதை பற்றி பார்க்கலாம். உண்மையில், 5ஜி நெட்வொர்க்குகள் உங்கள்  பேட்டரியின் சார்ஜை வேகமாக காலி செய்யும். இதன் பொருள் உங்கள் தொலைபேசி முழுமையாக பாதிக்கும் என்று அர்த்தமல்ல, நீங்கள் அதை அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்.

5ஜி நெட்வொர்க்கால் உங்கள் பேட்டரிக்கு ஆபத்தா?

டெலிகாம் டாக்கின் கூற்றுப்படி, 5ஜி நெட்வொர்க்குகள் பொதுவாக 4ஜி நெட்வொர்க்குகளை விட அதிக பவரை எடுத்துக்கொள்கின்றன. இது பேட்டரியை வேகமாக வெளியேற்றும். இதற்கு பல காரணங்கள் உள்ளன, அவற்றில் 2020 மற்றும் 2021 க்கு இடையில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் பல 5ஜி சிப்செட்கள் முழுமையாக மேம்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க : உங்க போனை 100% சார்ஜ் செய்யக் கூடாது – எச்சரிக்கும் நிபுணர் – ஏன் தெரியுமா?

அது மட்டுமல்லாமல், 2022-2023 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் பொருத்தப்பட்ட 5ஜி சிப்செட்களில் அதிக வெப்பமடைதல் சிக்கல்கள் உள்ளன, இது விரைவான பேட்டரியின் பவரை விரைவாக காலி செய்வதாக உள்ளது. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் சரி செய்யப்பட்டு முறையான ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரியின் ஆயுள் குறையுமா?

5ஜி நெட்வொர்க்குகள் இன்னும் எல்லா இடங்களிலும் முழுமையாக கிடைக்கவில்லை. இதனால் ஸ்மார்ட்போன் பெரும்பாலும் 5ஜி இலிருந்து 4ஜிக்கு மாறுகிறது, குறிப்பாக குறைவான 5ஜி சிக்னல்கள் உள்ள பகுதிகளில், நெட்வொர்க் அடிக்கடி மாறுவதால், பேட்டரியை விரைவாக காலி செய்கிறது. மேலும், 5ஜி சிக்னல் பலவீனமாக இருக்கும்போது, ​​தொலைபேசி மீண்டும் மீண்டும் ஒரு சிக்னலை கண்டடைய முயற்சிக்கும். இந்த செயல்முறை பேட்டரியின் சார்ஜை விரைவாக குறைக்கும்.

உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரி ஆயுளை பொறுத்தவரை அதில் இடம்பெற்றுள்ள சாஃப்ட்வேர் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. சாஃப்ட்வேர் சரியாக மேம்படுத்தப்பட்டால், அது 5G நெட்வொர்க்குகளில் பேட்டரி பயன்பாட்டைக் குறைக்க உதவும். ஆப்பிள் அதன் சொந்த 5G மோடத்தையும் வெளியிட்டுள்ளது, இது பேட்டரி பயன்பாட்டைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் வாடிக்கையாளர்கள் மேம்பட்ட பேட்டரி ஆயுளைப் பெற அனுமதிக்கிறது. ஒட்டுமொத்தமாக, சாஃப்ட்வேர் சரியாக அப்டேட் செய்யப்ப்படாவிட்டால், பேட்டரி நுகர்வு அதிகரிக்கும்.

இதையும் படிக்க : இந்த லேப்டாப்பை ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்… தொடர்ந்து ஒரு வாரம் பயன்படுத்தலாம்

மேலும் இதில் வீடியோ முக்கிய பங்கு வகிக்கிறது. 5ஜி ஸ்மார்ட்போனில் அல்ட்ரா-ஹை டெஃபனிஷன் (UHD) முறையில் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வது 720p அல்லது 1080p தெளிவுத்திறனை விட வேகமாக போன் பேட்டரியை காலி செய்யும். அதிக தெளிவுத்திறன் கொண்ட காட்சிகள் அதிக பேட்டரி சக்தியைப் பயன்படுத்துகின்றன.