Flight Mode : பிளைட் மோடை இதற்கெல்லாம் பயன்படுத்தலாமா?.. அட இது தெரியாம போச்சே!
Airplane Mode Use In Smartphone | ஸ்மார்ட்போனில் உள்ள பிளைட் மோடை சிலர் நெட்வொர்க் சரிசெய்யும் அம்சமாக மட்டுமே பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், பிளைட் மோடை பயன்படுத்தி மேலும் பல விஷயங்களை செய்யலாம். அது என்ன என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தற்போதைய காலக்கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். ஆனால், பலரும் ஸ்மார்ட்போனில் உள்ள பல அம்சங்களை எப்படி பயன்படுத்துவது என தெரியாமல் உள்ளனர். அவ்வாறு ஸ்மார்ட்போன் பயனர்களால் பெரிதாக பயன்படுத்தப்படாத ஒரு அம்சம் உள்ளது. அதுதான் பிளைட் மோட் (Flight Mode). இந்த அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என தெரியாமல் பலரும் உள்ளனர். இந்த நிலையில், பிளைட் மோட் அம்சத்தில் உள்ள சிறப்புகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிளைட் மோடில் இருக்கும் சிறப்பு அம்சங்கள்
பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட்போனில் நெட்வொர்க் சிக்கல் இருக்கும்போது மட்டுமே பிளைட் மோடை பயன்படுத்துகின்றனர். ஆனால், வேறு சிலவற்றுக்காக பிளைட் மோடை பயன்படுத்தலாம்.
பேட்டரி ஆயுளை சேமிக்க
ஸ்மார்ட்போனின் பேட்டரி நீண்ட நேரம் நீடிக்க இந்த பிளைட் மோட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிளைட் மோடை ஆன் செய்யும்போது பேட்டரி உறிஞ்சும் ஆப்ஷன்களை இந்த அம்சம் திறம்பட கட்டுப்படுத்தும். ஸ்மார்ட்போனில் பேட்டரி மிகவும் குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த அம்சத்தை பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப்பில் வரப்போகு அசத்தல் அம்சம்.. இனி பிடித்தவர்களின் ஸ்டேட்டஸ் மிஸ் ஆகாது!
ஸ்மார்ட்போனின் சார்ஜிங் வேகத்தை அதிகரிக்க
எப்போதாவது உங்களது ஸ்மார்ட்போன் முற்றிலுமா சார்ஜ் குறையும் பட்சத்தில் அதனை உடனடியாக சார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அப்போது மொபைல் போனை பிளைட் மோடில் போட்டு சார்ஜ் செய்யும் பட்சத்தில் மிக விரைவாக சார்ஜ் ஏறும். அதாவது சாதாரனமாக ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகும் நேரத்தை விடவும், பிளைட் மோடில் சார்ஜ் செய்யும் பட்சத்தில் 4 மடங்கு அதிகாமக சார்ஜ் ஆகும்.
டிஜிட்டல் டிடாக்ஸாக செயல்படும்
ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு மனிதர்களின் நேரத்தை முற்றிலுமாக எடுத்துக்கொள்கிறது. இந்த நிலையில், சமூக ஊடக பயன்பாடு அல்லது ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் இருந்து சற்று விடுபட்டு இருக்க வேண்டும், நேரத்தை முறையாக பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க : ஃப்Oppo Find X Series : ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் சீரீஸில் அறிமுகமான இரண்டு அசத்தல் ஸ்மார்ட்போன்கள்!
ஸ்மார்ட்போனில் பிளைட் மோடை நெட்வொர்க் சரிசெய்தற்கு மட்டும் பயன்படுத்தாமல் இந்த தேவைகளுக்கும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.