Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Oppo Find X Series : ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் சீரீஸில் அறிமுகமான இரண்டு அசத்தல் ஸ்மார்ட்போன்கள்!

Two New Smartphones in Oppo Find X Series | ஓப்போ நிறுவனம் தனது ஃபைண்ட் எக்ஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வந்தது. அந்த வகையில் ஓப்போ ஃபைண்ட் எஸ்க் 9 மற்றும் ஓப்போ ஃபைண்ட் எஸ்க் 9 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

Oppo Find X Series : ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் சீரீஸில் அறிமுகமான இரண்டு அசத்தல் ஸ்மார்ட்போன்கள்!
ஓப்போவின் புதிய ஸ்மார்ட்போன்கள்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Oct 2025 18:02 PM IST

இந்தியர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் ஓப்போ (Oppo). இந்த நிறுவனம் அவ்வப்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், தற்போது இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Oppo Find X Series Smartphones) அறிமுகம் செய்து வந்த ஓப்போ அதில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 (Oppo Find X9) மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 ப்ரோ (Oppo Find X9 Pro) ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 அறிமுகம்

இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் OLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9, ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுமே டைமன்சிட்டி 9500 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 ஸ்மார்ட்போனில் 7,025 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 7,500 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தீபாவளி சேலில் ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!

விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

சீனாவில் ஓப்போ ஃப்ணைட் எக்ஸ் 9 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 4399 யென் ஆக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.54,350 ஆகும். ஓப்போ ஃப்ணைட் எக்ஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 5299 யென் ஆக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.65,450 ஆகும். இந்த இரண்டு மாடல்களிலும் அரம்ப வேரியண்ட் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆக உள்ளது.

இதையும் படிங்க : அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது Vivo X300 மற்றும் Vivo X300 Pro!

இந்த ஸ்மார்ட்ர்போன்கள் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில்  இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 2025, நவம்பர் 15 ஆம் தேதிக்கு மேல் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.