Instagram : இன்ஸ்டாகிராமில் வந்தது டூடுல் அம்சம்.. பயன்படுத்துவது எப்படி?
New Doodle Feature in Instagram | இன்ஸ்டாகிராம் செயலிக்கு ஏராளமான பயனர்கள் உள்ள நிலையில், மெட்டா அதில் பல அசத்தல் அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது டூடுல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பொதுமக்கள் மெட்டா (Meta) நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் (Instagram) செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு ஆகிய இரண்டுக்கு சிறந்த தேர்வாக உள்ளது. இதன் காரணமாகவே ஏராளமான பொதுமக்கள் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவு இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் பல புதிய புதிய அம்சங்களை மெட்டா, இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் செயலி
உலக அளவில் இளைஞர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் செயலி மிகவும் பிரபலமாக உள்ளது. சாட் மற்றும் ரீல்ஸ் அம்சத்தை பயனர்கள் மிக அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக அதில் பல புதிய புதிய அம்சங்களை மெட்டா அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது டூடுல் (Doodle) அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, கையில் எழுதுவதை போல இன்ஸ்டாகிராம் சாட்டில் எழுதி அனுப்பலாம். இந்த அம்சத்தை தான் மெட்டா அறிமுகம் செய்துள்ளது. இதனை பயனர்கள் மிகவும் ஆர்வமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : வங்கி கணக்கில் இருந்து ரூ.90,000 பணத்தை எடுத்த வங்கி.. பொறுப்பை ஏற்க மறுத்ததால் பெண் அதிர்ச்சி!




டூடுல் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?
- அதற்கு முதலில் இன்ஸ்டாகிராம் செயலிக்கு செல்ல வேண்டும்.
- பிறகு சாட்டுக்குள் செல்ல வேண்டும்.
- அதில் குறுஞ்செய்தி டைப் செய்யும் கீ போர்டுக்கு மேலே பிளஸ் சிம்பிள் ஒன்று கொடுக்கப்பட்டு இருக்கும்.
- அந்த பிளஸ் சிம்பிளை கிளிக் செய்ய வேண்டும்.
- அப்போது உங்களுக்கு லொகேஷன் (Location), ஏஐ இமேஜஸ் (AI Images), வரைதல் (Draw) மற்றும் மெட்டா ஏஐ (Meta AI) என நான்கு ஆப்ஷன்கள் தோன்றும்.
- அதில் வரைதல் என்று இருக்கும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு நீங்கள் என்ன எழுத நினைக்கிறீர்களோ, வரைய நினைக்கிறீர்களோ அதனை உங்கள் விரல் மூலம் வரைய தொடங்கலாம்.
- பிறகு சென்ட் பட்டனை கிளிக் செய்து அதனை உங்களது நண்பர்களுக்கும் அனுப்பலாம்.
இதையும் படிங்க : நவம்பரில் அறிமுகமாக வரிசை கட்டி நிற்கும் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!
மேற்குறிப்பிட்ட இந்த முறையை பின்பற்றி உங்கள் நண்பர்கள் உடன் டூடுல் மூலம் உரையாடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.