ஸ்மார்ட்போன்களுக்கு வேறு சார்ஜர்களை பயன்படுத்த கூடாதா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Smartphone Charger Myths You Should Know | பெரும்பாலான நபர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களுக்கு வேறு சார்ஜர் பயன்படுத்தினால் விரைவில் சார்ஜ் ஆகது என நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் அப்படி அல்ல. எந்த சார்ஜரை வேண்டுமானாலும் எந்த ஸ்மார்ட்போனுக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு சார்ஜ் மிக அவசியமான ஒன்றாக உள்ளது. சார்ஜ் இல்லையென்றால் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த முடியாது. எனவே அவசர தேவைகளின்போதோ அல்லது சார்ஜரை மறந்து வீட்டிலே வைத்துவிட்டு சென்றாலோ பிறரிடம் சார்ஜ் வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். அப்போது சிலர், தங்களுடைய சார்ஜர் தங்களது ஸ்மார்ட்போனுக்கு மட்டுமே பொருந்தும் என கூறுவர். இதனை காரணமாக கருதி பெரும்பாலான நபர்கள் வேறு சார்ஜர்களை கொண்டு தங்களது ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்ய மாட்டர். ஆனால், உண்மை அது அல்ல. ஸ்மார்ட்போனின் சார்ஜர்களை மாற்றி பயன்படுத்தினால் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சார்ஜர்களின் முக்கிய பணி என்ன?
வீட்டுக்கு வரும் 230 வாட்ஸ் மின்சாரத்தை வோல்டேஜ் சப்ளையாக மாற்றி அதனை ஸ்மார்ட்போனுக்கு ஏற்றபடி நேரடி மின்சாரமாக மாற்றுவது தான் சார்ஜர்களின் முக்கிய பணியாக உள்ளது. இந்த நிலையில், சார்ஜர்களின் குறிப்பிடப்படும் 80 வாட்ஸ், 30 வாட்ஸ் என்பவையெல்லாம் அவற்றின் பவரை குறிப்பதற்காக குறிப்பிடப்படுகின்றன. அவ்வாறு சார்ஜரின் பவர் அதிகமாக இருந்தால் பேட்டரியும் சார்ஜ் அதிகமாக இருக்கும். இதுதான் அதற்கு பின் இருக்கும் உண்மை.
இதையும் படிங்க : பெண்களுக்கு அதிக பலன்களை வழங்கும் சேமிப்பு திட்டங்கள்.. செக் பண்ணுங்க!
எந்த சார்ஜரையும், எந்த ஸ்மார்ட்போனுக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்
ஸ்மார்ட்போன்கள் வாங்கும்போது அந்த பாக்சில் உள்ள கேபிள்கள் நீண்ட நாட்கள் உழைக்காது. இதன் காரணமாக புதிய சார்ஜரை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அவ்வாறு புதிய கேபிள் வாங்கும்போது ஏற்கனவே இருந்த பவரை விடவும் சற்று அதிகமான பவர் கொண்ட கேபிளை வாங்க வேண்டும். அதாவது முன்னதாக நீங்கள் 67 வாட்ஸ், 33 வாட்ஸ் சார்சர்களை பயன்படுத்தி வந்தீர்கள் என்றால் அதற்கு அதிகமான திறன் கொண்ட 100 வாட்ஸ் கேபிள் சார்ஜரை வாங்க வேண்டும். அடாப்டரை வாங்கும்போது அதனுடைய வாட்சை பார்த்து வாங்குவது சிறப்பானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இனி ஏஐ மூலம் உங்கள் இன்ஸ்டா ஸ்டோரியை மாஸாக மாற்றலாம்.. எப்படி?
தங்களுடைய சார்ஜரில் சார்ஜ் செய்ததால் ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகும் என்பது முற்றிலும் தவறான கருத்தாகும். எந்த ஒரு சார்ஜராக இருந்தாலும் அந்த டிவைஸை பொருத்துதான் அதற்கான நேரம் நிர்ணயம் செய்யப்படும். எனவே எல்லா சார்ஜர்களையும், எந்த ஸ்மார்ட்போனுக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.