இனி ஏஐ மூலம் உங்கள் இன்ஸ்டா ஸ்டோரியை மாஸாக மாற்றலாம்.. எப்படி?
New AI Feature in Instagram Story | பெரும்பாலான பொதுமக்கள் மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்ஸ்டா செயலியில் உள்ள ஸ்டோரி அம்சத்தை செயற்கை நுண்ணறிவு அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் ஏராளமான செயலிகளை பயன்படுத்துகின்றன. அந்த வகையில் உலக அளவில் உள்ள கோடி கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் செயலி தான் மெட்டாவின் (Meta) இன்ஸ்டாகிராம் (Instagram). இந்த செயலி பொழுதுபோக்கு, தகவரல் பரிமாற்றம் என் பல அம்சங்களை கொண்டுள்ள நிலையில், பலரும் இதனை விரும்பி பயன்படுத்துகின்றனர். இந்த செயலியில் ஏற்கனவே பல அசத்தல் அம்சங்கள் உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இனி ஏஐ பயன்படுத்தலாம்
இன்ஸ்டாகிராம் செயலியில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. அத்தகைய அம்சங்களில் ஒன்றுதான் ஸ்டோரி. இந்த அம்சத்தை பயன்படுத்தி பலரும் தங்களது அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை பகிர்ந்து வருகின்றன. இது பலருக்கும் மிகவும் பிடித்த அம்சமாக உள்ள நிலையில், இதில் மேலும் ஒரு முக்கிய அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. அதாவது செயற்கை நுண்ணறிவு அம்சத்தை தான் மெட்டா அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை மிகவும் சிறப்பானதாக மாற்ற முடியும்.
இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் தொல்லை கொடுக்கும் ஸ்பேஸ் மெசேஜ்கள்.. புதிய தீர்வை அறிமுகம் செய்யும் மெட்டா!




இன்ஸ்டா ஸ்டோரியில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?
- அதற்கு முதலில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி (Instagram Story) அம்சத்திற்குள் செல்ல வேண்டும்.
- அங்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள பெயிண்ட் பிரஷ் சிம்பிளை கிளிக் செய்ய வேண்டும்.
- அப்போது உங்களுக்கு புகைப்படத்தை எடிட் செய்வதற்கான ரீஸ்டைல் (Restyle) அம்சம் தோன்றும்.
- அதனை பயன்படுத்தி Add என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் பிராம்ப்டுகளை (Prompt) கொடுத்து கூடுதலாக ஏதேனும் ஒன்றை இணைக்கலாம்.
- இதேபோல அதில் உள்ள Remove என்ற ஆப்ஷனை கிளிக் செய்து புகைப்படத்தில் தேவை இல்லாதவற்றை நீக்கம் செய்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : Flight Mode : பிளைட் மோடை இதற்கெல்லாம் பயன்படுத்தலாமா?.. அட இது தெரியாம போச்சே!
மேற்குறிப்பிட்ட இந்த முறையை பின்பற்றி சாதாரண உங்களது புகைப்படங்களை மிகவும் சிறப்பானதாக மாற்றி ஸ்டோரியில் பதிவிடலாம். இந்த அம்சம் இன்ஸ்டாகிராம் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.