வாட்ஸ்அப்பில் தொல்லை கொடுக்கும் ஸ்பேஸ் மெசேஜ்கள்.. புதிய தீர்வை அறிமுகம் செய்யும் மெட்டா!
New Feature to Come in WhatsApp to Stop Spam Messages | வாட்ஸ்அப் பயனர்களுக்கு பெரிய சிக்கலாக உள்ளது ஸ்பேம் செய்திகள் தான். இந்த நிலையில், ஸ்பேம் செய்திகளை முடக்கும் வகையில் மெட்டா ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

உலக அளவில் பில்லியன் கணக்கான மக்கள் மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு வாட்ஸ்அப் பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் எதிர்க்கொள்ளும் பெரிய சிக்கலாக ஸ்பேம் மெசேஜ்கள் (Spam Messages) உள்ளன. இதன் காரணமாக பயனர்கள் மிக கடுமையான சிக்கல்களை எதிர்க்கொண்டு வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த மெட்டா ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் பயனர்களுக்கு வரும் ஸ்பேம் குறுஞ்செய்திகள் குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஸ்பேம் மெசேஜ்களை கட்டுப்படுத்த வாட்ஸ்அப்பில் வரவுள்ள புதிய அம்சம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸ் அப்பில் ஸ்பேம் தொல்லை – கட்டுப்படுத்த விரைவில் வரும் புதிய அம்சம்
வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றத்திற்கான பிரதான செயலியாக உள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது தகவல் பரிமாற்ற தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டு வருகின்றனர். இருப்பினும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும்போது ஸ்பேம் குறுஞ்செய்திகள் பயனர்களின் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. இதனை சரிசெய்வதற்கான முயற்சியை தான் தற்போது மெட்டா கையில் எடுத்துள்ளது. அதாவது வரும் நாட்களில் பதில் அளிக்காத வாட்ஸ்அப் கணக்குகளுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கு வரம்பு விதிக்கப்பட உள்ளது. அதாவது ஒரு பிசினஸ் கணக்கில் இருந்து ஒரே நபருக்கு தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி பதில் வரவில்லை என்றால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பிறகு குறுஞ்செய்தி அனுப்புவது தானாகவே நிறுத்தப்படும் என கூறப்படுள்ளது.
இதையும் படிங்க : முதலீட்டு மோசடியில் சிக்கிய நிதி நிறுவன மேலாளர்.. ரூ.5 கோடி பணத்தை இழந்த அதிர்ச்சி!




மெட்டாவின் புதிய கொள்கை மாற்றம்
வாட்ஸ்அப் செயலியில் சாதாரன பயனர்கள் மற்றும் பிசினஸ் பயனர்கள் ஆகிய இருவருக்குமே இது மிக முக்கியமான கொள்கை மாற்றமாக இருக்கும். அதாவது, பதிலளிக்காத எண்ணுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு குறுஞ்செய்தியும் அனுப்புநரின் மாதாந்திர ஒதுக்கீட்டில் இணைக்கப்படும் என்று மெட்டா கூறியுள்ளது. இதன் மூலம் பதில் அளிக்கப்படாத நபர்களுக்கு தொடர்ந்து அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் தானாகவே கட்டுப்படுத்தப்படும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : தீபாவளி சேலில் அசத்தல் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் புளூடூத் ஸ்பீக்கர்கள்.. பட்டியல் இதோ!
பதிலளிக்காத எண்ணுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு குறுஞ்செய்தியும் அனுப்புநரின் மாதாந்திர ஒதுக்கீட்டில் இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில், அதற்கான கணக்கீடு குறித்து மெட்டா அறிவிக்காமல் உள்ளது. மெட்டா கொண்டுவரவுள்ள இந்த கொள்கை மாற்றம் நண்பர்கள், குடும்பத்தினர், தனிப்பட்ட தொடர்புகளுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.