Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒன்பிளஸ் தீபாவளி சேல்.. ஸ்மார்ட்போன்கள் முதல் பட்ஸ் வரை.. அசத்தல் தள்ளுபடி!

OnePlus Diwali Sale For Smartphones and Buds | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் பல சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஒன்பிளஸ் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்கள் மற்றும் பட்ஸ்களுக்கு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் தீபாவளி சேல்.. ஸ்மார்ட்போன்கள் முதல் பட்ஸ் வரை.. அசத்தல் தள்ளுபடி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Oct 2025 17:43 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் அசத்தல் சலுகைகளை வழங்கி வருகின்றன. ஸ்மார்ட்போன்கள், மின்சாதன பொருட்கள், வீட்டு உயயோக பொருட்கள் என அனைத்திற்கும் சிறந்த தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஒன்பிளஸ் நிறுவனமும் தனது தீபாவளி சேலை நடத்தி வருகிறது. இந்த சேலில் ஒன்பிளஸ் 13 (OnePlus 13), ஒன்பிளஸ் 13 ஆர் (OnePlus 13 R), நோர்டு உள்ளிட்ட சமீபத்திய மாடல்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ.12,250 வரை தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிறப்பு சலுகை குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒன்பிளஸின் தீபாவளி சலுகை – ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி

  • ரூ.69,999 மதிப்புள்ள ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போன் வெறும் ரூ.57,749-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர ரூ.4,250 வரை வங்கி சலுகையும் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படுகிறது.
  • ரூ.42,999 மதிப்புள்ள ஒன்பிளஸ் 13 ஆர் (OnePlus 13 R) ஸ்மார்ட்போன் வெறும் ரூ.35,749-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.7,250 வரை இந்த ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி பெறலாம்.
  • ரூ.50,999 மதிப்புள்ள ஒன்பிளஸ் 13 எஸ் (OnePlus 13 S) ஸ்மார்ட்போன் வெறும் ரூ.47,749-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.3,250 வரை இந்த ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி பெறலாம்.

இதையும் படிங்க : அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது Vivo X300 மற்றும் Vivo X300 Pro!

ஒன்பிளஸ் நோர்டு வகை ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி

  • ரூ.39,999 மதிப்பிலான ஒன்பிளஸ் நோர்டு (OnePlus Nord) ஸ்மார்ட்போன் 8 சதவீத தள்ளுபடியுடன் வெறும் ரூ.28,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.11,000 வரை தள்ளுபடி பெறலாம்.
  • ரூ.24,999 மதிப்பிலான ஒன்பிளஸ் நோர்டு சிஇ5 (OnePlus Nord CE5) ஸ்மார்ட்போன் வெறும் ரூ.21,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.3,000 வரை தள்ளுபடி பெறலாம்.

இதையும் படிங்க : உங்கள் பழைய கேஸ் ஸ்டவ்களை மாற்ற இதுதான் சரியான நேரம்.. அசத்தல் தள்ளுபடி வழங்கும் அமேசான்!

ஒன்பிளஸ் பட்ஸ்களுக்கும் அசத்தல் தள்ளுபடி

ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த தீபாவளி சேலில் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமன்றி, பட்ஸ்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

  • ரூ.5,999 மதிப்பிலான ஒன்பிளஸ் பட்ஸ் 4 (OnePlus Buds 4) வெறும் ரூ.4,799-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • ரூ.11,999 மதிப்பிலான ஒன்பிளஸ் ப்ரோ 3 பட்ஸ் (OnePlus Pro 3 Buds) வெறும் ரூ.7,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த தீபாவளி சேலில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பட்ஸ்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுவதுடன் 6 மாதங்கள் வரை No Cost EMI வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.