BSNL : தீபாவளிக்கு இரண்டு அசத்தல் அம்சங்களை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல்.. என்ன என்ன தெரியுமா?
2 New Offers of BSNL for Diwali | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இரண்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களாக ஜியோ, ஏர்டெல் உள்ளிட்டவை தங்களின் ரீச்சார்ஜ் திட்டங்களுக்கான விலையை அதிரடியாக உயர்த்தின. இதன் காரணமாக பயனர்கள் மத்தியில் விரக்தி ஏற்பட்ட நிலையில், ஏராளமான பயனர்கள் தங்களது சிம் கார்டுகளை அரசின் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்புக்கு மாற்றினர். இந்த நிலையில், பயனர்களின் வசதியை மேம்படுத்தும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் பல அசத்தல் அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு முக்கிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தீபாவளிக்கு இரண்டு அசத்தல் அம்சங்களை வழங்கும் பிஎஸ்என்எல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இரண்டு முக்கிய அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாட்டில் இ சிம் சேவை தொடக்கம் மற்றும் தீபாவளி போனஸ் சிறப்பு சலுகை ஆகியவற்றை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : உங்கள் பழைய கேஸ் ஸ்டவ்களை மாற்ற இதுதான் சரியான நேரம்.. அசத்தல் தள்ளுபடி வழங்கும் அமேசான்!




பிஎஸ்என்எல் இ சிம் சேவை என்றால் என்ன?
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த இ சிம் சேவையை பழைய மற்றும் எம்.என்.பி வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் தேவை இருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது பிஎஸ்என்எல் இணைப்பை இ சிம் ஆக மாற்றிக்கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. இது தவிர தீபாவளிக்காக சிறப்பு ரீச்சார்ஜ் சலுகை ஒன்றையும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : அமேசான் vs ஃப்ளிப்கார்ட்: எந்த தளத்தில் ஸ்மார்ட் டிவி விலை குறைவு? தீபாவளிக்கு எது சரியான சாய்ஸ்?
தற்போது முதல் நவம்பர் 15, 2025 வரை வெறும் ரூ.1 மட்டும் செலுத்தி புதிய சிம் கார்டு பெற்றுக்கொள்ளலாம். இந்த சிம் கார்டை பயன்படுத்தி 30 நாட்கள் வரை தினசரி 2ஜிபி இலவச டேட்டா, காலவரையற்ற குரல் அழைப்புகள் ஆகியவற்றை பெற்றுக்கொள்ளலாம். அதுமட்டுமன்றி, பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 25வது ஆண்டு சில்வர் ஜூபிலியை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய ஃபைபர் இணைய திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.