Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தீபாவளி சேலில் அசத்தல் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் புளூடூத் ஸ்பீக்கர்கள்.. பட்டியல் இதோ!

Discount for Bluetooth Speakers in Diwali Sale | தீபாவளியை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், தீபாவளி சேலில் அசத்தல் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் புளூடூத் ஸ்பீக்கர்கள் குறித்து பார்க்கலாம்.

தீபாவளி சேலில் அசத்தல் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் புளூடூத் ஸ்பீக்கர்கள்.. பட்டியல் இதோ!
தள்ளுபடியுடன் கூடிய ஸ்பீக்கர்கள்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Oct 2025 20:23 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. மின்சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் என பலவற்றுக்கு அசத்தல் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் (Amazon Great Indian Festival Sale) சில பிராண்டுகளின் புளூடூத் ஸ்பீக்கர்களுக்கு (Bluetooth Speakers) அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், எந்த எந்த புளூடூத் ஸ்பீக்கர்களுக்கு எவ்வளவு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமேசான் சேலில் அசத்தல் தள்ளுபடியுடன் கிடைக்கும் புளூடூத் ஸ்பீக்கர்கள்

Bose SoundLink Flex

பார்டிகளுக்கு ஏற்ப சிறந்த ஆடியோ தரம் கொண்டதாக இந்த Bose SoundLink Flex ஸ்பீக்கர் உள்ளது. இந்த ஸ்பீக்கர் 12 மணி நேரம் நீடித்து உழைக்கும் பேட்டரியை கொண்டுள்ளது. இந்த ஸ்பீக்கர் ரூ.15,180-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அமேசான் சேலில் வெறும் ரூ.9,925-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : MappIs : கூகுள் மேப் செயலிக்கு போட்டியாக அறிமுகமான Mappls.. அமெரிக்க வேலையை உதறிவிட்டு இந்தியர் செய்த சாதனை!

JBL Flip 7

பார்ட்டிகள் மற்றும் திறந்தவெளிகளில் வைத்து பயன்படுத்த சிறந்த புளூடூத் ஸ்பீக்கராக இந்த JBL Flip 7 உள்ளது. இந்த ஸ்பீக்கரில் 16 மணி நேரம் நீடித்து உழைக்கும் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு நாள் முழுவதும் பயன்படுத்த சிறந்ததாக இருக்கும். இந்த ஸ்பீக்கர் ரூ.16,842-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அமேசான் சேலில் ரூ.11,699-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Sonos Era 100

உங்களுக்கு ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் பிடிக்கும் என்றால் இந்த Sonos Era 100 சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஸ்பீக்கர் 60 வாட்ஸ் ஸ்டீரியோ அவுட்புட் கொண்டுள்ளது. இந்த புளூடூத் ஸ்பீக்கரின் விலை ரூ.22,272 ஆக இருந்த நிலையில், தற்போது அமேசான் சேலில் ரூ.17,799-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : UPI : 2026 முதல் யுபிஐ-ல் வரும் முக்கிய அம்சம்.. என்ன தெரியுமா?

Marshall Willen 2

இந்த ஸ்பீக்கர் சிறந்த தோற்றம் மற்றும் தரத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்பீக்கரில் 10 வாட்ஸ் சிக்னேச்சர் சவுண்ட் உள்ளது. இந்த புளூடூத் ஸ்பீக்கர் 17 மணி நேரம் நீடித்து உழைக்கும் பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. இந்த பேட்டரி ரூ.11,934-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அமேசான் சேலில் ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.