Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

UPI : 2026 முதல் யுபிஐ-ல் வரும் முக்கிய அம்சம்.. என்ன தெரியுமா?

New Feature Will be Introduce in UPI | பயனர்களின் நலன் கருதி இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் பல புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், 2026-ல் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.

UPI : 2026 முதல் யுபிஐ-ல் வரும் முக்கிய அம்சம்.. என்ன தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Oct 2025 20:53 PM IST

இந்தியர்கள் மத்தியில் யுபிஐ (UPI – Unified Payment Interface) சேவை பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும்  நிலையில், மிக எளிதாக பயனர்கள் சேவைகளை பெறும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சேவைகளில் மாற்றம் செய்வது, சேவைகளை எளிதானவையாகவும், வேகமானதாகவும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI – National Payment Corporation of India) மாற்றி வருகிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு முதல் யுபிஐ-ல் முக்கிய அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன அம்சம், அதில் என்ன சிறப்பு உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் யுபிஐ

இந்தியாவில் பொதுமக்கள் மத்தியில் யுபிஐ சேவை மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சிறிய பெட்டிக் கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை என அனைத்து இடங்களிலும் யுபிஐ பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர நகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் முதல் இந்தியாவின் கடைகோடி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் வரை என பலரும் யுபிஐ சேவையை பயன்படுத்துகின்றனர். இத்தகைய முக்கிய சேவையாக யுபிஐ விளங்கும் நிலையில், அதில் புதிய அம்சம் அறிமுகமாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : Ration Card : இந்த விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்கள்.. இல்லையெனில் உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்!

2026-ல் யுபிஐ-ல் வரும் முக்கிய அம்சம்

டிசம்பர் 31, 2025 முதல் யுபிஐ-ல் ஒரு புதிய அம்சம் அமலுக்கு வர உள்ளது. அந்த அம்சத்தை பயன்படுத்தி யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் ஆட்டோ பேமெண்டுகளை (Auto Payments) பயனர்கள் பார்க்கவும், மேலாண்மை செய்யவும் முடியும். இதன் மூலம் ஆட்டோ பேமெண்ட் ஆப்ஷனை செயல்படுத்துவதை பயனர்கள் எளிதாக அறிந்துக்கொள்ள முடியும் என்றும், அதுமட்டுமன்றி ஆட்டோ பேமெண்டுகளை பயனர்களே மிக சுலபமாகவும் நிறுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Aadhaar Card : பயோமெட்ரிக் அப்டேட்.. ஒரு ஆண்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம்.. UIDAI அசத்தல் அறிவிப்பு!

யுபிஐ பயனர்களின் நலனுக்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், இந்த புதிய அம்சம் 2026-ல் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.