Ration Card : இந்த விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்கள்.. இல்லையெனில் உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்!
Prevent Ration Card Deactivation | தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் நடைபெறும் மோசடி சம்பவங்களை தடுக்க அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

இந்தியாவில் உள்ள குடும்பங்களுக்கான அடையாள அட்டையாக ரேஷன் அட்டைகள் (Ration Card) உள்ளன. அடையாள அட்டையாக மட்டுமன்றி, பொதுமக்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் கருவியாகவும் இது உள்ளது. இவ்வாறு மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் கார்டு இருக்கும் நிலையில், பொதுமக்கள் செய்யும் இந்த சிறிய தவறு மூலம் அவர்களின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படுவதற்கும், அவர்களது ரேஷன் அட்டை ரத்து செய்யப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரேஷன் அட்டையை முறையாக பராமரிக்க தவறும் பொதுமக்கள்
அரசின் நலத்திட்டங்களில் பயன்பெற வேண்டும் என்றால் ரேஷன் கார்டு மட்டும் வைத்திருந்தால் போதாது. அந்த ரேஷன் கார்டை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். அரசின் அறிவுரைப்படி ரேஷன் கார்டுகளை தொடர்ந்து அப்டேட் செய்வது, மாதம் மாதம் தவறாமல் பொருட்களை வாங்குவது ஆகியவை ரேஷன் கார்டுகளை முறையாக பராமரிக்கும் நடைமுறைகளாகும். இவற்றை செய்யாமல் இருக்கும் பட்சத்தில் அது அரசின் கவனத்திற்கு சென்று ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கிவிடும்.
இதையும் படிங்க : Aadhaar Card : ஆதார் சேவைகளுக்கான கட்டணம் உயர்வு.. அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது!




ரேஷன் கார்டை முறையாக பராமரிப்பது எப்படி?
தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலம் ஏராளமான மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு தகுதியற்ற ரேஷன் கார்டுகளை நீக்கம் செய்யும் தீவிர பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
- ரேஷன் கார்டை பயன்படுத்தி மாதம் மாதம் ரேஷன் கடையில் பொருட்களை வாங்க வேண்டும். அவ்வாறு மாதம் மாதம் பொருட்களை வாங்காத அட்டைகளை அரசு ரத்து செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
- ரேஷன் கார்டுகளை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று அரசு ஏற்கனவே அறிவித்தது. இந்த முறையை முடிக்காதவர்களின் ரேஷன் அட்டையும் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
- தற்போது ரேஷன் கடைகளும், ரேஷன் அட்டையும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒரு ரேஷன் அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகைகளும் அந்த ரேஷன் அட்டையில் இணைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.
இதையும் படிங்க : வீட்டில் இருந்தே சேவைகளை பெற வந்தாச்சு mAadhaar செயலி.. பதிவிறக்கம் செய்வது எப்படி?
மேற்குறிப்பிட்ட இந்த விஷயங்களை செய்து முடிக்கவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.